வீட்டில் அடைத்துவைத்தால் காதல் வருமா?

பிக்பாஸ் காதல் லீலைகள்

பிக்பாஸ் டிவி ஷோ ஒவ்வொரு சீசனிலும் சில போட்டியாளர்கள் காதல் ஜோடியாக மாறி லவ் செய்கிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் நடிகை ஓவியா தீவிர காதலில் விழுந்ததும், காதலனுக்காக போராடியதையும் இன்று வரை பலரும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.  

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் காதல், மோதல், பழிவாங்குதல், சண்டை, போட்டி, பொறாமை, கிசுகிசு இருந்தால் மட்டுமே ரசிகர்கள் சுவாரஸ்யமாகப் பார்ப்பார்கள். அதற்காக திட்டமிட்டு சில ஸ்கிரிப்ட் உருவாக்கப்படுகிறது என்பது உண்மைதான்.

அதேநேரம் உளவியல் ரீதியாக பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு காதல் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதே உண்மை. தனிமை, நெருக்கம், மனதில் இருப்பதை பேசும் சுதந்திரம், கட்டுப்படுத்த யாரும் இல்லாத சூழல் போன்றவை எசக மனிதரை நோக்கி ஈர்க்கிறது. அந்த ஈர்ப்புதான் காதலாக மாறுகிறது. எனவே அவர்கள் காதல் நிஜம்.

கொஞ்ச நாட்கள் பிக்பாஸ் வீட்டில் அடைத்துவைப்பதால் மட்டும் காதல் வந்துவிடுமா என்று கேள்வி நிறைய பேருக்கு வரலாம். காதல் தெய்வீகமானது, காதல் புனிதமானது என்ற எண்ணத்தில் வாழும் மனிதர்கள் பிக்பாஸ் காதலை போலி என்றும் நடிப்பு என்றும் குறை சொல்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது நிஜமாகவே காதலில் விழுகிறார்கள். ஆனால், அங்கிருந்து வெளியே வந்ததும் குடும்பத்தினரிடம் வெளிப்படையாக உண்மையை யாரும் சொல்வதில்லை. தங்களை பலவீனமாக நினைப்பார்கள் என்று காதலை மறைத்துவிடுகிறார்கள். அதனாலே அவர்கள் காதல் உடைந்துபோகிறது. பிக்பாஸ் வீட்டில் அவர்கள் காதலித்தது நிஜம், அவர்கள் பிரிவும் நிஜம்.

காதல் புனிதமும் இல்லை, அவமானமும் இல்லை. காதல் பிரிவும் தவறு இல்லை. எனவே எந்த ஒரு காதலையும் சந்தேகப்படாதீர்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment