தாய்ப்பாலில் ஆச்சர்ய உண்மைகள்

கலிபோர்னியாவைச் சேர்ந்த பரிணாம மானுடவியலாளர் கேட்டி ஹிண்டே என்பவர்  700-க்கும் மேற்பட்ட தாய்மார்களிடம் இருந்து பெறப்பட்ட தாய்ப்பாலை ஆய்வு செய்து ஆச்சர்யமான உண்மைகளை அறிவித்தார்.

ஆண் குழந்தைகளுக்கு அதிக கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த பாலும், பெண் குழந்தைகளுக்கு அதிக அளவு மற்றும் மாறுபட்ட ஊட்டச்சத்துக்கள் கொண்ட பாலும் தாய்க்கு சுரக்கிறது. முதல் முறை தாயானவர்களின் பாலில் ‘கார்டிசோல்’ என்னும் ஹார்மோன் சற்று அதிகமாக இருக்கிறது. இது குழந்தையின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.  

குழந்தை பால் குடிக்கும்போது, அதன் உமிழ்நீர் தாயின் மார்பகத்திற்குச் சென்று குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பு பற்றிய தகவலைத் தருகிறது. குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தால், சில மணி நேரங்களிலே தாய்ப்பாலில் வெள்ளை அணுக்களும், ஆன்டிபாடிகளும் பன்மடங்கு பெருகி குழந்தைக்கு நேரடி மருந்தாக மாறுகிறது. குழந்தை குணமடைந்ததும் பால் பழைய நிலைக்குத் திரும்புகிறது. மேலும், பகல், இரவு நேரத்திற்கு ஏற்பவும் பாலின் தன்மை மாறுகிறது என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்.

Leave a Comment