மனைவியை மகிழ்ச்சியாக்குவது எப்படி..?

ரிலேசன்ஷிப் சீக்ரெட்ஸ்

மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு பணம், கார், பயணம் தேவையில்லை. இந்த முயற்சிகளை மேற்கொண்டால் போதும்.

  1. உங்கள் மனைவிக்கு நல்ல நண்பராக இருக்க முயற்சி செய்யுங்கள். என்ன நடந்தாலும் முதலில் நண்பனாகவும், பிறகு காதலனாகவும் இருங்கள்.
  2. மனைவி பேசுவதை, நடவடிக்கையை நம்புங்கள். எந்தவொரு உறவிற்கும் முக்கிய அம்சம் நம்பிக்கை,.
  3. ஒவ்வொரு நபருக்கும் கருத்துவேறுபாடுகள், பல்வேறு விருப்பங்கள் இருக்கும். ஆனால், எந்தெந்த விஷயங்களில் இருவருக்கும் ஒற்றுமை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதை அதிகப்படுத்துங்கள்.
  4. மனைவியிடம் நீங்கள் பேச விரும்புவதை, தெரிவிக்க நினைப்பதை வெளிப்படையாகப் பேசுங்கள். அவராகப் புரிந்துகொள்வார் என்று நினைக்க வேண்டாம்.  
  5. எப்போதும் உண்மையைப் பேசுங்கள், உண்மையை மறைப்பதும் பொய். எனவே, உண்மையைப் பேசி மனைவியை புரிந்துகொள்ளச் செய்யுங்கள்.
  6. மனைவிக்குத் தாங்களே முடிவெடுக்க இடமும் சுதந்திரமும் கொடுங்கள். அவர்களின் தனிப்பட்ட நேரத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கினால் கணவன், மனைவி அன்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதை உணர்வீர்கள்.

Leave a Comment