படிச்சா பிடிக்கும்.
உலகெங்கும் பழமொழிகள் உண்டு அவை எல்லாமே அனுபவத்தின் குறியீடு என்கிறார் ராஜேஷ். நமது தமிழக கிராமங்களில் புழங்கும் சில பழமொழிகளை புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்.
- ஆட்டுக்கு வால அளந்து போட்டு இருக்கான்.
- எத்த சொன்னானாம் பரியாரி அத்த கேட்டானாம் நோயாளி.
- மேயுற மாடு கொம்புல புல்ல கட்டிகிட்டா மேயும்.
- பட்டு புடவையை கடன் கொடுத்துட்டு தடுக்கு தூக்கிகிட்டு அலைஞ்சாளாம்.
- ஆட தெரியாதவ முற்றம் கோணல் என்றாளாம்.
- ஏற்கனவே சிகப்பு இதுல நகையை போட்டவுடன் மினுக்குதாம்.
- அருக்க தெரியாதவன் சூத்துல அம்பத்திரெண்டு கருக்கருவா.
- கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலன்னானாம்.
- எல்லார் கிட்டயும் புடுங்கி வச்சான் என்னுகிட்ட வாங்கி வச்சானாம்.
- கோனைக்கு ஏத்த குழி வெட்டுனானாம். இருக்கிறத விட்டு விட்டு பறக்கிறத புடிச்சானாம்.
- குண்டி காஞ்சாலும் குதிரை வைக்கோல் திங்காதாம்.
- காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் இழுத்து கிட்டு பூட்டானாம்.
