மந்திரச்சொல்
துன்பம், துயரம், தோல்வி, நஷ்டம், பிரிவு, மரணம் போன்றவை வாழ்வின் ஒரு அங்கம். பிறர் நம்மை காப்பாற்றுவார்கள், உதவி செய்வார்கள் என்று காத்திருப்பது கூடுதல் துன்பமே தரும்.
ஆறுதல் கூறுவதற்கு சிலர் வரலாம். தோளில் கை வைத்து நம்பிக்கை தரலாம். சிலர் உதவிகள் செய்யலாம். ஆனால், அந்த வேதனையை முழுமையாக அகற்றும் சக்தி அவர் மனதுக்கு மட்டுமே உள்ளது. அவர் விரும்பினால் மட்டுமே அந்த வேதனையிலிருந்து மீண்டுவர முடியும்.
துன்பத்திலிருந்து மீண்டுவரும் துணிவு, தோல்விக்குப் பிறகும் முயற்சிக்கும் தைரியம், கண்ணீருக்குப் பிறகு சிரிப்பு போன்ற எல்லாமே மனிதரின் ஆழ்மனதின் நம்பிக்கையிலே உதயமாகிறது.
சில நேரங்களில் யாரும் நம்மை புரிந்துகொள்ளாமல் போகலாம். யாரும் வராமல் போகலாம். ஆனாலும், தன்னைத்தானே நம்பத் தொடங்கினால், மனதிலிருக்கும் இருள் கொஞ்சம் கொஞ்சமாக ஒளியாக மாற ஆரம்பிக்கும்.
எனவே, துன்பத்தை வெல்வதற்கு பிறர் உதவி தேவையில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மனசுக்குள் மழையடித்தால் போதும். நம்பிக்கை எனும் விதை முளைத்து, மரமாக மாறி, நல்ல பலன் கொடுக்கத் தொடங்கிவிடும்.
மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
