மந்திரச்சொல்
கடன் இல்லாத வாழ்க்கையில் பணச் சுதந்திரம் மட்டுமன்றி மனச் சுதந்திரமும் அடங்கியிருக்கிறது. அவர்களால் எல்லா நேரமும் சிரிக்க முடியும்.
கடன் இல்லாமல் வாழ்பவர்கள் ஏழைகள் அல்ல, நிம்மதியாக வாழ்பவர்கள்தான் உண்மையான செல்வந்தர்கள். கடன் வாங்கி ஆடம்பரமாக வாழ்வதை விட, வருமானத்திற்கு ஏற்றபடி அமைதியாக வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை.
படுக்கை மெத்தையாக இருந்தால் தூக்கம் வருவதில்லை, மனம் அமைதியாக இருந்தால்தான் இனிய உறக்கம் வரும்.
உளவியல் ரீதியாக கடன் மனிதருக்கு மூன்று அழுத்தங்களை உருவாக்குகிறது:
அடுத்த மாதம் இ.எம்.ஐ. பற்றிய எண்ணம் எப்போதும் மனதை அழுத்தத்தில் வைத்திருக்கும். இந்த தொடர் மனஅழுத்தம், கோபம், பதட்டம், குடும்ப சண்டை, உடல்நல பிரச்சினைகள் வரை கொண்டு செல்கிறது..
தங்கள் தேவைக்காக இல்லாமல் மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்ற மனநிலைக்காக நிறைய கடன் வாங்கப்படுகிறது. இந்த ஒப்பீடு மனநிம்மதியை குறைக்கிறது.
கடன் இருக்கும் மனிதரால் விருப்பமான வாழ்க்கையை வாழ முடியாது.
பிடிக்காத வேலையை விட முடியாது. கடன் சில நேரங்களில் பணத்தை மட்டும் அல்ல; மனிதனின் சுதந்திரத்தையும் அடகு வைக்கிறது.
மனிதனுக்கு மகிழ்ச்சி தருவது பொருட்களின் எண்ணிக்கை அல்ல; மனதில் இருக்கும் பாதுகாப்பு உணர்வு. உண்மையான செல்வம் என்பது:
எவ்வளவு சம்பாதித்தோம் என்பதில் இல்லை. எவ்வளவு நிம்மதியாக வாழ்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
