காதல் என்ற பெயரில் அதிக அன்பைப் பொழிகிறார்கள். பாதுகாப்பு என்ற பெயரில் அதிக கட்டுப்பாடு விதிக்கிறார்கள். இதை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள்.
காதல் யாரையும் கட்டுப்படுத்தாது, காயப்படுத்தாது. காதல் என்பது விரும்பியவரை சிறைக்குள் வைக்கும் தங்கக் கூண்டு அல்ல; சிறகுகளை விரித்து பறக்க உதவும் வானம்.
அதிக பாசம் காட்டி, அவசரப்படுத்தி நெருக்கடி உருவாக்கும் நபர்களை காதலிக்காதீர்கள். எல்லைகளை மதிக்காத யாரும், அன்பிற்குத் தகுதியானவர்கள் அல்ல. மன அமைதியை விட எந்த உறவும் பெரியதல்ல.
காதல் பொறுமையாக காத்திருக்கும். அன்பு மட்டுமே காட்டும், அதிகாரம் காட்டாது. ஆதலால், தெளிவாக காதல் செய்வீர்.
