தமிழ் வார்த்தை நகைச்சுவை
தமிழ் மொழியில் ஒரு வார்த்தைகள் எக்கச்சக்க அர்த்தம் தரக்கூடியது. இந்த நகைச்சுவை காலத்தால் அழியாதது. பழசு என்றாலும் எத்தனை முறை படித்தாலும் சிரிப்பு வரும்.
அதிகாலை வேளை காவல் நிலைய தொலைபேசி மணி அழைக்க, காவலர் அருள் தொலைபேசியை எடுத்துக் பேசினார்…
காவலர் : “ஹலோ அண்ணாநகர் காவல் நிலையம், சொல்லுங்க..”
எதிர் முனை : “சார்.. இங்க ஒருத்தரச் சுட்டுட்டார் சார்..”
காவலர் : “சுட்டது யாருன்னு தெரியுமா?”
எதிர் முனை : “தெரியும் சார்…”
காவலர் : “யார் சுட்டது?”
எதிர் முனை : “‘சுடலை’ சார்..”
காவலர் (குழப்பத்துடன்): “யோவ் சுட்டாங்களா இல்லையா?”
எதிர் முனை : “சுட்டாங்க சார்..”
காவலர் : “யார் சுட்டது?” எதிர் முனை :
“‘சுடலை’ சார்”
காவலர் : “உஸ்ஸ்… உங்கள் பேர் என்னங்க?”
எதிர் முனை : “‘சாரதி’ சார்.”
காவலர் (கோபத்துடன்): “அட்ரஸ் சொல்லுங்க இப்போ வரோம்…”
கொலை நடந்த இடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றனர் காவல் துறையினர். அந்த இடத்தில மூவர் நின்று கொண்டிருந்தனர். சுடப்பட்ட ஒருவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
காவலர் : “இதை பார்த்த சாரதி யாரு?” அங்கே இருந்த ஒருவர் கையை தூக்கி ‘நான் தான்’ என்று கூறினார்.
அவரைப் பார்த்து காவலர் : “சொல்லுங்க… என்ன பார்த்தீங்க?”
பார்த்த சாரதி : “நான் ஒன்னும் பார்க்கல சார்.. நான் இப்பத்தான் வந்தேன்”
காவலர் (டென்சன் ஆகி): “யோவ்.. பிறகு எதுக்குயா கையைத் தூக்குன??”
பார்த்த சாரதி : “என் பேர் ‘பார்த்த சாரதி’ அதான் கையத் தூக்கினேன்..”
இன்னொருவரைப் பார்த்து காவலர் : “அப்ப.. நீ யாருயா?”
சாரதி (போனில் பேசியவர்): “நான் தான் சார் பார்த்த சாரதி”
(கடுங்கோபத்தில்) காவலர் : “யோவ் உன் பேரும் பார்த்த சாரதியா?”
சாரதி : “இல்ல சார்”
காவலர் : “நீ தானய்யா சொன்ன பார்த்த சாரதினு”
சாரதி : “ஆமா சார்”
காவலர் : “அப்ப ஏன் இல்லனு சொன்ன?”
சாரதி : “என் பெரு பார்த்த சாரதி இல்லேனு சொன்னேன் சார் “
காவலர் : “அப்ப உன் பேரு என்ன?”
சாரதி : “‘சாரதி’ சார்”
காவலர் : “சுட்டதை பார்த்தது நீங்கள் தானா?”
சாரதி : “ஆமாம் சார்” தி
ரும்பி ‘பார்த்தசாரதி’யப் பார்த்து காவலர் : “அப்ப நீங்க?”
பார்த்த சாரதி : “கொலையைப் பார்க்காத பார்த்தசாரதி சார்”.
சாரதியைப் பார்த்து காவலர் : “போன் செய்தது நீ தானா?”
சாரதி : “ஆமாம் சார்”
காவலர் : “சரி சொல்லுங்க… சுட்டது யார்?”
சாரதி மூன்றாம் நபரைக் காட்டி… “இவர் தான் சார்”
அந்த மூன்றாம் நபரைப் பார்த்து…. காவலர் : “நீ யாரு?”
3ம் நபர் : “நான் ‘சுடலை’ சார்”
சாரதியைப் பார்த்து காவலர் : “யோவ்… அவரு சுடலைனு சொல்லுறாரு…” சா
ரதி : “ஆமாம் சார் அவர் ‘சுடலை'”
காவலர் : “அப்ப சுட்டது யாரு?” சுடலையைக் காண்பித்து
சாரதி : “‘சுடலை’ சார்…..”
காவலர் தலை கிறுகிறுக்க… தலையில் கை வைத்து கீழே உக்கார்ந்துவிட்டார்.
