சூப்பர் ஹிட் ஜோக்ஸ்
கோபாலுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை நல்லறமாக இல்லறம் கழிந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டது. ஒரு நாள் தற்செயலாக மனைவிக்கு ஒரு சந்தேகம் எட்டிப் பார்த்தது. அதாவது, குழந்தை என் மாதிரியும் இல்லை, என் கணவன் மாதிரியும் இல்லை என்று நினைத்தாள். நாளுக்கு நாள் அந்த சந்தேகம் அதிகமானது. எனவே, இந்த சந்தேகத்தைத் தீர்த்துவிடுவது என்று முடிவெடுத்தாள்.
கணவனுக்குத் தெரியாமல் திட்டமிட்டு டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்தாள். பரிசோதனையில் அந்த குழந்தை இவர்களுடையது இல்லை என்பது உறுதியானது. கணவன் இதை எப்படி சொல்வது என்று புரியாமல் தடுமாறினாள்.
ஆனாலும் சொல்லிவிடுவது நல்லது என்று கணவன் நல்ல மூடில் இருக்கும்போது பேச்சைத் தொடக்கினாள்.
‘’என்னங்க… நான் சொல்றதைக் கேட்டு அதிர்ச்சி அடையாதீங்க. எனக்கு சந்தேகமா இருந்திச்சு. அதனால உங்ககிட்டே கேட்காம நம்ம பிள்ளைக்கு டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்துப் பார்த்தேன். அது நம்ம பிள்ளை இல்லை, வேறு யாரோ ஒருத்தங்க பிள்ளை….’’ என்றாள்.
’’அது எனக்கு ஏற்கெனவே தெரியுமே…’’ அசட்டையாக பதில் சொன்னான் கணவன்.
மனைவிக்கு பேரதிர்ச்சி. ’’என்னங்க இந்த உண்மை உங்களுக்கு எப்போ தெரியும், எப்படித் தெரியும்..?’’
‘’நீ பிள்ளை பெத்து ஆஸ்பத்திரியில இருந்த நேரத்துல டயப்பரில அவன் ஆய் போயிட்டான். நீதான், ஏங்க இவன் ஆய் போயிட்டான், அதனால மாத்திட்டு வாங்கன்னு சொன்னே. அதான், ஆஸ்பத்திரியில இருந்த வேறு ஒரு பிள்ளையை எடுத்துட்டு, நம்ம பிள்ளையை வைச்சுட்டு வந்துட்டேன்’’ என்றான்.
மனைவி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள்.
