ஞானகுரு பதில்கள்
கேள்வி : மகிழ்ச்சி என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன..?
- சி.செந்தில்குமார், திண்டுக்கல்.
ஞானகுரு :
ருசியாக சாப்பிடுவது, ஜாலியாக அரட்டையடிப்பது, மது குடிப்பது, பாலியல், சினிமா போன்ற கலைகள் சந்தோஷம் தரலாம். ஆனால், இவை எல்லாம் மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இவை தற்காலிக சந்தோஷமே தருகின்றன.
உண்மையான மகிழ்ச்சியின் இலக்கணம் புரிந்தால் மட்டுமே பொய் மகிழ்ச்சியின் வித்தியாசத்தை அறியமுடியும்.
நாம் வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது, முக்கியத்துவம் இருக்கிறது, நம்மால் குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யமுடியும் என்ற எண்ணமே மகிழ்ச்சியின் அடிநாதமாகத் திகழ்கிறது. அதனாலே தலைவர்கள், உயர் அதிகாரிகள், வெற்றியாளர்கள் எல்லா நேரங்களிலும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.
அதோடு உறவுகள், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்களின் அன்பு, பாசம், நெருக்கம் போன்றைவயும் மகிழ்ச்சிக்கு ஆதார சக்தியாகத் திகழ்கிறது. மேலும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு சின்னச்சின்னதாக புதுப்புது விஷயங்கள் கற்றுக்கொள்வதும் மகிழ்ச்சி தருகிறது. உண்மையான மகிழ்ச்சி ஒரு கொண்டாட்டமாக இருப்பதில்லை. ஆனால், அதீத இருக்கும். நேற்று பற்றி கவலை இல்லாமல், நாளை பற்றிய அச்சம் இல்லாமல் இன்றைய வாழ்க்கையை அனுபவிப்பதே மகிழ்ச்சி.












