கூவம் நதி சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 361

கூவம் நதியை சுத்தம் செய்யப்போகிறோம் என்று மேயர் சைதை துரைசாமி ஆலோசனை மேற்கொண்ட காலத்திலேயே பலரும் நமட்டுச்சிரிப்பு சிரித்தார்கள். மீண்டும் அரசு பணத்தை எடுத்து ஆற்றுக்குள் போட்டு வீணாக்கப் போகிறார்கள் என்றே கருதினார்கள். அவர்கள் மீது எந்த தவறும் இல்லை. ஏனென்றால், அதற்கு முந்தைய காலகட்டங்களில் கூவம் சீரமைப்புக்கு செய்யப்பட்ட அத்தனை பனமும் வீணாகவே போயிருந்தது.

ஆகவே, சிங்கப்பூர் சென்று வந்த மேயர் சைதை துரைசாமி கூவத்தை சீர்படுத்துவதற்கு மிகச்சிறப்பான செயல்திட்டத்தை முன்வைத்தார். அதன் அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா கூவம் நதி சீரமைப்புக்கு நிதி ஒதுக்கி வரலாற்று சாதனை படைத்தார். அதனை பெருநகர மாமன்றத்தில் அறிவித்த மேயர் சைதை துரைசாமி கூவம் நதியில் பச்சையப்ப முதலியார் குளித்து கோயிலுக்குச் சென்றார் என்று கூறிய தகவல்களைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார்கள். கூவம் நதியில் நீர்வழிப் போக்குவரத்தும் இருந்தது என்ற உண்மையை எடுத்துரைத்தார்.

அடுத்து பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’சென்னைக்குப் பெருமையாக இருந்த கூவம் நதி காலநிலைக் கோளாறுகளின் காரணத்தால், சுற்றுச் சூழல் சிந்தனையற்ற தனி மனித சுயநலத்தால், நீர்வழியைப் பேண வேண்டும் என்ற பொதுநல சிந்தனையற்ற தன்னலக் குறுமனத்தால் இன்று கழிவுகளின் புகலிடமாகவும், குப்பை கழிவுகளின் இருப்பிடமாகவும் மாறி, சென்னையின் அவலம் என்ற பெயரைப் பெற்று விட்டது.

எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் மாளாது, மாளாது, என்று சொல்லும்படி, கொசு உற்பத்திக் கேந்திரமாகவும், தொய்வில்லாது துர்நாற்றத்தை வீசுகின்ற துயரப் புனலாகவும்  மாறி, சென்னையின் அவலம் என்ற பெயரை கூவம் ஆறு பெற்று விட்டது.  கூவம் ஆற்றின் இந்தப் பழம் பெருமையை மீட்டு, மீண்டும் அதனை சென்னையின்  பெருமை என்று ஆக்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், 1934 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மாபெரும் திட்டத்தை செயல் படுத்துகிறார்கள்…’’ என்று கூறியதைக் கேட்டு அத்தனை பேரும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment