வாழ்வை மாற்றும் மந்திரச்சொல்

Image

வார்த்தைகளே வரம்

காய்ந்துகிடக்கும் பொட்டல் காட்டில் ஒரே ஒரு மழையில் ஒட்டுமொத்த புற்களும் வளர்ந்துவிடும். அப்படித் தான் சின்னச்சின்ன வார்த்தைகள் மனிதர்களின் வாழ்க்கையையும் மனநிலையையும் மாற்றிவிடக் கூடும். அப்படி காலத்தால் அழியாத சில குட்டிக் குட்டி தத்துவங்கள் இங்கே.

  • பிச்சை கேட்பவனை கேவலமாகவும் தட்சணை கேட்பவனை சாமியாகவும் பார்க்கும் மூடர்கள் மனித இனத்தில் சாபக்கேடு – டாக்டர் அம்பேத்கர்
  • நீ வாழும் வாழ்க்கையை நேசி. நீ நேசிக்கும் வாழ்க்கையை வாழ் -பாப் மார்லி
  • புத்தர் அமைதியைத் தேடி அரண்மனையை கைவிட்டார், நாமோ அரண்மனையைத் தேடி அமைதியை கை விடுகிறோம் – ஓஷோ
  • எதையும் கேட்காதே. எதையும் எதிர்ப்பார்க்காதே. எதை சார்ந்தும் வாழாதே. இது தான் சுதந்திரம். ~ அய்ன் ரேண்ட்
  • கோபத்தை தாளிடப்பட்ட அறைக்குள்ளும் அன்பை பொதுவெளியிலும் வெளிப்படுத்துங்கள் – தேவிபாரதி
  • வருத்தத்தினால் யாரும் பிரிந்துபோகவில்லை. பிரிய வேண்டும் என்று விரும்பிய பிறகு வருத்தங்கள் உண்டாக்கப்பட்டன. – மனுஷ்
  • பெருந்தன்மை என்பது முடிந்ததைவிட அதிகம் கொடுப்பது. பெருமை என்பது தேவையை விட குறைவாக எடுப்பது – கலீல் ஜிப்ரான்.
  • என் முயற்சிகள் என்னை கைவிட்டதுண்டு, நான் ஒரு போதும் முயற்சியை கைவிட்டதில்லை – எடிசன்
  • கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்களே தோற்கிறார்கள் – அப்துல் கலாம்
  • மனிதரின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்தே பிறக்கின்றன – நபிகள் நாயகம்

Leave a Comment