• Home
  • யாக்கை
  • காரம் சாப்பிட்டால் அல்சர் வரும்?

காரம் சாப்பிட்டால் அல்சர் வரும்?

Image

நிஜமா ,நிஜமில்லையா?

காரமான உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு அல்சர் வரும் என்ற கருத்து எல்லோருக்கும் இருக்கிறது. ஜீரணம் தொடர்பான பிரச்னையில் இருப்பவர்களுக்கு காரத்தை தவிர்க்குமாறு மருத்துவர்களும் அறிவுரை கூறுவதால் கார உணவே அல்சருக்குக் காரணம் என்று அனைவரும் நம்புகிறார்கள். உண்மையில் ஹெச்.பைலோரி எனப்படும் ஹீலியோபாக்டர் பைலோரி என்ற கிருமியாலே அல்சர் உருவாகிறது. இது வயிற்றில் சுரக்கும் அமிலத்தினாலும் அழிக்கப்படாமல் வயிற்றில் புண் உருவாக்குகிறது.

இந்த பைலோரி கிருமி என்ன காரணத்தால் உருவாகியுள்ளது என்பதை ரத்தம், மலம் அல்லது எண்டாஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதே அல்சரை தீர்ப்பதற்கு சரியான வழிமுறை ஆகும். காரமான உணவு சாப்பிடுபவர்களுக்கு எல்லாம் அல்சர் வரும் என்பது உண்மை அல்ல.

Leave a Comment