கேள்வி : இலக்கு நோக்கி பயணிக்கும் எல்லோராலும் ஜெயிக்க முடிவதில்லை. சிலர் இலக்கை தவற விடுவது ஏன்..? – பி.திலகவதி, நாகர்கோவில்.
ஞானகுரு :
எத்தனை தெளிவான இலக்கு இருந்தாலும் எத்தனை பயிற்சி எடுத்துக்கொண்டாலும் எல்லோராலும் இலக்கை தொட்டுவிட முடிவது இல்லை. இது காலம் காலமாக நடந்துவரும் இயல்பான செயல். திறமை, முயற்சி இருந்தாலும் வெற்றியை தொட முடியாமல் போவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், அந்த இலக்கு என்பது வெற்றி இல்லை, அதை நோக்கிய பயணமே வெற்றி என்பதை புரிந்துகொண்டால் போதும். கவலைப்பட ஏதுமில்லை, இலக்கு என்பதே ஒரு பயணமே.
gyaanaguru.com Changed status to publish July 13, 2024