கேள்வி : அரசால் வகுக்கப்படும் பல திட்டங்கள் பயனற்றுப் போவது ஏன்..? – பி.வெற்றிவேல், நாகர்கோவில்.
ஞானகுரு :
வீட்டில் நான்கு பேர் மட்டுமே இருப்பது நன்றாகவே தெரியும். ஆனாலும் சில நாட்களில் ஏதேனும் காரணங்களால் உணவு விஞ்சி வீணாகிறது. அதேபோல் சில நேரங்களில் வீட்டில் செய்யப்படும் உணவிலும் அலர்ஜி ஏற்பட்டு வாந்தி, வயிரோட்டம் வருகிறது. வீட்டுக்கு என திட்டம் போட்டு சமைக்கும்போதே இத்தனை குளறுபடி, உணவு வீணாகிறது எனும்போது ஒரு நாட்டுக்கு திட்டம் போடும்போது பல்வேறு குற்றம், குறைகள் இருக்கத்தான் செய்யும்.
லட்சக்கணக்கான விதைகளை மரம் அனுப்பிக்கொண்டே இருக்கும் என்றாலும் அவை எல்லாமே முளைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. முளைப்பவை சரியான பலன் கொடுத்தால் போதும். அதுபோலத்தான் அரசு போடும் திட்டங்களும் சிலருக்காவது பயன் தருகிறதா என்று பார்க்க வேண்டும். அதன்பிறகு அதனை மெருகேற்ற வேண்டுமே தவிர, வெறுப்படையத் தேவையில்லை.
gyaanaguru.com Changed status to publish July 6, 2024