கேள்வி : வெளிநாடுகளுக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு இங்கு தனிமரமாய் தவிக்கும் பெற்றோர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன..? – செல்வரதி – சுந்தரராஜ், இளையான்குடி.
ஞானகுரு :
வெளி நாட்டிற்குச் சென்று வேலை செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அப்படி வெளிநாட்டு வேலைக்குச் சென்றதற்காக குற்றவுணர்ச்சி அல்லது ஏக்கம் இருப்பது சரியல்ல. அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் உள்ளூரில் வேலை செய்வதே போதுமானது. ஏனென்றால், பணத்தினால் மட்டும் வாழ்க்கை ஒருபோதும் சிறப்படைவதில்லை. வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்த நிறைய பேர் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தியாகி வேடம் போடுவதற்காக யாரும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டாம். அதேபோல் பணத்துக்காக பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு பாசத்தில் புலம்புவதும் வேஷமே.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதே உலக தத்துவம். நம் வீடு, நம் ஊர், நம் மாவட்டம் என்றெல்லாம் வாழ யாவருக்கும் அவசியம் இல்லை.
gyaanaguru.com Changed status to publish July 6, 2024