கேள்வி : சிரிப்பதற்கு ரொம்பவும் பிகு செய்து வாழ்கிறார்களே சிலர். அவர்கள் என்ன மனநோயாளிகளா அல்லது அறிவாளிகளா..? – டி.முத்துராஜ், வெற்றிலையூரணி
ஞானகுரு :
வேலை நேரத்தில் சிரிக்கக்கூடாது, படிக்கும்போது சிரிக்கக்கூடாது, வாய்விட்டு சிரிக்கக்கூடாது, கூட்டத்தில் சிரிக்கக்கூடாது, சிரிக்கும்போது சத்தம் வரக்கூடாது, இரவில் சிரிக்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதிப்பவர்களே மன நோயாளிகள். வாழ்க்கையின் நுட்பம் அறிந்தவர்கள் ஒருபோதும் சிரிப்புக்கு கட்டுப்பாடு விதிக்க மாட்டார்கள். சிரிப்புதான் மனிதர்களின் மாமருந்து. சிரிப்பு எளிதாக பிறரிடம் தொற்றிக்கொள்ளும். ஆகவே, சிரிக்க மறக்காதீர்கள்.
gyaanaguru.com Changed status to publish July 5, 2024