கேள்வி : இளமையில் படிக்கத் தவறுவதும் முதுமையில் படிக்காததற்கு வருந்துவதும் வாழ்வியல் துயரமா? – P.கந்தசாமி, அருப்புக்கோட்டை
ஞானகுரு :
இளம் வயதில் சந்தோஷமாக சுற்றித் திரிவதற்கு ஆசைப்படுவது மனித இயல்பு. வாழ்க்கையின் அழுத்தமும் தீவிரமும் அந்த வயதில் புரிவதில்லை. அதனாலே பெரும்பாலோர் கடமைக்காக படித்து முடிக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. ஒரு சிலர் படிப்பின் மூலம் ஜெயிப்பதைக் கண்டு பொறாமையும் ஏக்கமும் கொள்பவர்களே முதுமையில் படிக்காமல் போனதற்காக வருந்துகிறார்கள். உண்மையில் படிப்புக்கும் வெற்றிக்கும் சம்பந்தமே இல்லை. பொதுவாக படித்தவர்கள் அடிமை வேலைக்கே ஆசைப்படுகிறார்கள். படிப்பைத் தாண்டி சிந்திப்பவர்களே தொழிலதிபர்களாகவும் மிகப்பெரும் சாதனையாளர்களாகவும் மலர்கிறார்கள். எதுவாயினும் முடிந்துபோன விஷயத்துக்காக வருத்தப்படுவது வறட்டு சிந்தனை.
gyaanaguru.com Changed status to publish July 5, 2024