கேள்வி : நல்ல நேரம் கெட்ட நேரம் எந்த அளவுக்குப் பார்க்கலாம்…? – S.ராஜ்குமார், மேலூர்
ஞானகுரு :
நல்ல நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும், ராகு காலத்தில் தூங்கக் கூடாது, எம கண்டத்தில் பேசக்கூடாது என்றெல்லாம் மக்களின் அன்றாட அடிப்படை விஷயங்களில் கட்டுப்பாடு விதித்திருந்தால், இந்த கணக்குகளை எல்லாம் மக்கள் எப்போதோ தூக்கி குப்பைக் கூடையில் போட்டிருப்பார்கள். ஆனால், இந்த ஜோதிடக் கணக்குகள் எல்லாமே எதிர்கால அச்சத்தை உருவாக்கி பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. நல்ல நேரத்திலும் விபத்து, மரணங்கள் நடக்கின்றன. ராகு காலத்திலும் குழந்தைகள் பிறக்கின்றன, பூக்கள் மலர்கின்றன. ஆகவே, நாளும் கோளும் நலிந்தவர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்கள் அனைவருக்குமே தேவையில்லாத சமாச்சாரம்.
gyaanaguru.com Changed status to publish July 5, 2024