கேள்வி : ஜனநாயகம், கம்யூனிசம், பாசிசம் என்பனவற்றை சிம்பிளாக விளக்குங்களேன்..?- ஏ.பரமன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஞானகுரு :
ஒரு தொழிற்சாலையை நான்கு பேர் ஆளுக்கு ஒரு வருடம் என்று மாற்றி மாற்றி நிர்வாகம் செய்வது கம்யூனிசம். அவர்களில் சிறந்த ஒருவரை மற்ற மூவரும் சேர்ந்து தேர்ந்தெடுப்பது ஜனநாயகம். இனி தேர்தல் நடக்காது என்று ஆட்சியில் இருப்பவர் அறிவிப்பு செய்துவிட்டு நிர்வாகம் நடத்துவது பாசிசம்.
ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியாவை பாசிச நாடாக மாற்றுவதற்கு பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று சொன்னால் எளிமையாகப் புரியலாம். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே சட்டம் என்றெல்லாம் தங்களுக்குப் பிடித்ததை அல்லது தாங்கள் சரி என்று நினைப்பதை புகுத்த முயல்கிறார்கள். இந்த பாசிசம். வெளிப்படையாகப் பார்க்கும்போது நல்ல திட்டம் போன்றும் நியாயமானதாகவும் தெரியும், ஆனால், இது ஒரு வகையில் சர்வாதிகாரம். ஹிட்லர் ஒரு நல்ல பாசிஸ்ட். ஜெர்மன் நாட்டை அவர் அளவுக்கு அதிகமாக நேசித்த காரணத்தாலே அந்த நாடு பெரும் துயர் அடைய வேண்டியிருந்தது.