மூன்று சக்சஸ் விதிகள்
ஒவ்வொரு நபருக்கும் வெற்றி இலக்கு வித்தியாசமானது. சொந்த வீடு, வெளிநாட்டு வேலை, சாம்பியன், நல்ல கணவன், சினிமா புகழ், பிசினஸ், நிறைய பணம் என்று பலவிதமான ஆசைகள் இருக்கின்றன.
எதுவாக இருந்தாலும் ஆசைப்பட்டதை அடைவது வெற்றி. இப்படி வெற்றிக்கு ஆசைப்படுவது இயற்கையானது. ஆனால் விரும்பியதை அடைவதற்கு ஆசை மட்டும் போதாது. அதற்கான உழைப்பதற்கும் சில தியாகங்கள் செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
வெற்றி அடைவதற்கு மூன்று அடிப்படை வழிகள் இருக்கின்றன
இலக்கு
எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதில் எந்த குழப்பமும் இல்லாமல் உறுதியாக இருங்கள். பணக்காரராக வேண்டும் என்றால் எத்தனை கோடி என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.
திட்டமிடுதல்
வெற்றி இலக்கை அடைவதற்கு தெளிவான திட்டமிடல் அவசியம். இமயமலை ஏற வேண்டும் என்றால், அதற்கு முன்னதாக சின்னச்சின்ன மலைகளை ஏறி ஜெயிக்க வேண்டும்.
விடாமுயற்சி
எந்த இலக்கை அடைவது என்றாலும் தோல்விகள், தடைகள் வருவது இயல்பு. அந்த தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.
வெற்றியை விட, வெற்றியை நோக்கிய பாதையே முக்கியம். அதிர்ஷ்டம் அடிக்கும், சரியான நேரம் வரும், யாரேனும் உதவி செய்வார்கள் என்று காத்திருப்பவர்களால் ஒருபோதும் வெற்றி இலக்கை அடைய முடியாது.
வெற்றி அடைந்தால் மகிழ்ச்சி. வெற்றி அடையாவிட்டாலும், அந்த பாதையில் பயணித்த அனுபவம் மகிழ்ச்சி என்று உணரவேண்டும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
