வார்த்தைகளே வரம்

Image

வாழ்க்கையை மாற்றிவிடும் சக்தி சில வார்த்தைகளுக்கு உண்டு. அந்த வகையில் உலகப்புகழ் வாய்ந்த சில பொன்னெழுத்துக்களைப் படித்துப் பாருங்கள். மகிழ்ச்சி வரும்.

பிரார்த்தனைகளை விட பொறுமை நல்ல பயன் கொடுக்கும் – கெளதம புத்தர்

நடந்துகொண்டே இருங்கள், தானே பாதை உருவாகிவிடும் – ஜென்

கனவுகள் எல்லாம் நனவாகும். அதற்குள் நிறைய காயங்கள் விழுந்துவிடும் – சார்லி சாப்ளின்.

பாலைவனத்தைக் கடப்பவர்கள் தான் கதறி அழுகிறார்கள். வசிப்பவர்கள் அல்ல. – ப.பி

சூரியனுக்குக் கீழே கர்வப்பட்டுக் கொள்ள ஒன்றுமே இல்லை. – கலீல் ஜிப்ரான்

வாழ்க்கை சலிப்படைய தொடங்கும்போது, மரணம் பற்றிய எண்ணங்கள் சுவாரஸ்யமாகிவிடும். – ராஜன் யயாதி

சிந்தனை சரியில்லாத பொழுது ஏற்படும் ஒருவித மனநிலைக்கு பெயர் காதல் – ஓஷோ

நொடிக்கும் குறைவான நேரத்தில் சரியான முடிவெடுக்கத் தெரிந்தவனே தலைவன் – நரன்

நம் ஒவ்வொருவருக்கும் மற்றொருவர் தேவைப் படுகிறார் – எரிக் எரிக்சன்

நம் கண்ணுக்கு தெரியாமலே உலகத்தில் உள்ள அனைத்தையும், காலம் நகர்த்திக்கொண்டே இருக்கிறது. – சோ.தர்மன்

Leave a Comment