குட்டிக் குட்டி கவிதைகளே நெகிழ்ச்சி

மன்னர் சிவன் கவிதைகள்

நாலு பக்கம் கவிதை எழுதி தங்கள் கருத்தை சொல்வதற்கு அவசியம் இல்லை. குட்டிக் குட்டி கவிதைகளில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஆனந்தம் தரும் மன்னர் சிவன் கவிதைகள் படியுங்கள்.

மின்னல்

மேகக் கீறலில்

தங்கச் சிதறல்.

……………..

மழை

நீரில் கயிறு திரித்து

அழைக்கிறான்

கருப்புக்கொடி காட்டி

குடைக்குள் நான்…

………………

ஆதி மனிதன்

நீ செய்த வேலையை

நானும் தொடர்கிறேன்.

உனக்கு குகைச் சித்திரம்

எனக்கு பேஸ்புக்

………………..

கண்ணீர் தேசம்

இந்தியா விழித்துக்கொண்டது

மீன்பிடி தொழிலாளியாக்

மிஸ்ராவும் ஷர்மாவும்

ராமேஸ்வரத்தில்

………………………

நாய்

இரு கால்கள் தூக்கி

நீ தழுவியபோது

உன் வால் சொன்னது

’நீ என் விசிறி’ என்று.

……………….

நிதர்சன இயக்குனர்

கதை களமாம் மதுரை ;

கதாநயகியோ கேரளம்.

பாடகர் – சுந்தர தெலுங்க;

அலுக்கு லுங்கியில் கதாநாயகன்.

கொலைகளே கதையாம்

இது முத்தமிழ் மதுரை அல்ல.

முதல் சங்கம் தேடி,

குமரி கடல் நோக்கி நடந்தார்

மீனாட்சி சுந்தரேஸ்வரர்

……………….

மெளனத்தின் மருந்து

தாயிடம் நஞ்சு உண்டு

மனைவியிடம் நஞ்சு உணு

தொண்டையில் நஞ்சை நிறுத்திய

சிவன் போதித்தார்…

தொண்டையில் உதிக்கும் இடையினர் ஒலியில்

பேசி திரி –

வல்லினம், மெல்லினம் ஒலி

உதவாது… உதவாது… இது திண்ணம்.

மெளனம் இடையினம் தான்.

………………

Leave a Comment