உங்கள் பிள்ளையும் ஜீனியஸ் ஆகலாம்

பெற்றோர்களுக்குப் பரிசளிக்க ஏற்ற புத்தகம்

எல்லா பிள்ளைகளும் இயற்கை வைரம் போன்று பிறக்கிறார்கள். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களால் பட்டை தீட்டப்படும் அளவுக்கு ஜொலிக்கிறார்கள். ஜீனியஸ் ஆகிறார்கள்.

ஐந்தறிவு படைத்த மிருகம், பறவைகளை தங்கள் விருப்பதற்கு மனிதர்களால் ஆட்டுவிக்க முடிகிறது. டால்பின் பந்து விளையாடுகிறது. யானை பாரம் சுமக்கிறது. நாய் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறது. கிளி ஜோசியம் பார்க்கிறது. இவற்றை எல்லாம் பழக்கப்படுத்தும் மனிதர்களால், தங்கள் பிள்ளையை எதிர்பாப்புக்கு ஏர்ப வளர்க்க முடிவதில்லை.

இதற்கு காரணம் அதீத அன்பு. அதீத அக்கறை. அதீத எதிர்பார்ப்பு. அதீத அவசரம். அதோடு போதிய புரிதல் இல்லாமை.

குழந்தை வளர்ப்பு என்பது பிள்ளைகளை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அல்ல. பிள்ளைகள் தங்களின் சொந்தக் காலில் நின்று எதிர்காலத்தைச் சுயமாக எதிர்கொள்ளும் நம்பிக்கை கொடுப்பது ஆகும். அதற்கு சரியான உளவியல் வழிகளைக் காட்டுகிறது இந்த புத்தகம்.

அதோடு, டீன் வயதில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிஜமான வாழ்க்கைக் கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த கவுன்சிலிங் கதைகள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு நிச்சயம் வழிகாட்டும்.

இது, ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொரு பெற்றோருக்கும் பரிசளிக்க வேண்டிய புத்தகம்.

ஞானகுரு பப்ளிகேஷன் வெளியீடு.

விலை ரூ.300 + தபால் செலவு ரூ.60

80725 89355 செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். பத்துக்கு மேற்பட்ட புத்தகம் வாங்குபவர்களுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படும்.

வங்கிக் கணக்கிலும் பணம் அனுப்பலாம்.

GYANAGURU PUBLICATION, UNION BANK OF INDIA, IFS CODE : UBIN0554847, Current Account No. 548401010050639

Leave a Comment