முதுமையிலும் இளமை ஆகலாம்

Image

டாக்டர் குணசீலன் ராஜன், ராஜன் பல் மருத்துவமனை, சென்னை

முதுமையில் பற்கள் விழுந்துவிடும் என்ற கவலைப்படும் மக்களுக்கு, நவீன மருத்துவத்தின் மூலம் நிரந்தரத் தீர்வு தருகிறார் ராஜன் பல் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் குணசீலன் ராஜன்.

பொதுவாகவே மக்கள் முதுமை அடையும் நேரத்தில் முகவடிவம் மாறிவிடுகிறது, பேச்சு குளறலாகிவிடும், மனசுக்குப் பிடித்ததை எல்லாம் கடித்து சாப்பிட முடியாது. இது போன்ற பிரச்னைகள் அதிகரிப்பதாலே பலரும் வயதாவதை நினைத்து வருந்துகிறார்கள். ஆனால், இன்றைய நவீன மருத்துவம் இதற்கு தீர்வு கண்டுபிடித்திருக்கிறது. அதாவது, தீர்வாக நிரந்தர செயற்கைப் பற்கள் பொருத்துவதன் மூலம் முதுமையினால் ஏற்படும் பல்வேறு தொந்தரவுகளில் இருந்து விடுபட முடியும்.

5 முதல் 85 வயது வரை

உலகம் முழுவதும் முன்னேறிய நாடுகளில் இம்ப்ளாண்ட் எனப்படும் நிரந்தர செயற்கை பற்கள் பொருத்திக்கொள்ளும் சிகிச்சை அதிகரித்துவருகிறது. எங்கள் மருத்துவமனையில் 20 வயது தொடங்கி அனைத்து முதியவர்களுக்கும் நிரந்தர செயற்கைப் பற்கள் பொருத்திவருகிறோம். அதேநேரம் ஐந்து வயதுக் குழந்தைக்கும் 85 வயது முதியவருக்கும் நிரந்தர செயற்கைப் பற்கள் பொருத்தியிருக்கிறோம்.

பொதுவாக இரண்டரை வயதுக்குள் பால்பற்கள் முளைத்துவிடும். ஆனால், 5 வயதாகியும் பற்கள் வளர்ச்சியடையாத ஒரு குழந்தையை பெற்றோர் கவலையுடன் அழைத்துவந்தார்கள். அந்தக் குழந்தையை முழுமையாகப் பரிசோதனை செய்து, நிரந்தர செயற்கைப் பற்கள் பொருத்தினோம். அதன்பிறகு, அந்தக் குழந்தை இயல்பாக எல்லா உணவுகளையும் கடித்துத் தின்பதைக் கண்டு பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். ஆசியாவிலேயே முதன் முதலாக 5 வயது குழந்தைக்கு இம்ப்ளான்ட் சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் தான் செய்யப்பட்டது என்பதில் பெருமைப்படுகிறோம்.

அதேபோன்று 85 வயது முதியவருக்கும் நிரந்தர செயற்கைப் பற்கள் பொருத்தினோம். இப்போது 95 வயதாகும் அவர் உணவுகளை இயல்பாக கடித்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். எங்களிடம் சிகிச்ச்சைக்கு வருபவர்களுக்கு  உலகப்புகழ் பெற்ற ஸைகோமா மற்றும் ஆல் ஆன் 4 சிகிச்சை மூலம் நிரந்தர செயற்கைப் பற்கள் பொருத்திவருகிறோம்.

.

யாருக்கு டெண்டல் இம்ப்ளான்ட் சிகிச்சை தேவை..?

வயது முதிர்வால் பற்கள் இழந்தவர்கள், ஈறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்து மற்றும் கருப்புப் பூஞ்சை நோயால் பற்கள் இழந்தவர்கள், பிறவிக் குறைபாடு உள்ளவர்கள் மட்டுமின்றி வேறு காரணங்களால் பற்கள், தாடை எலும்பு இழந்தவர்களுக்கு ஸைகோமா மற்றும் ஆல் ஆன் 4 சிகிச்சையே உலகம் முழுவதும் தீர்வாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஏனென்றால், பற்கள் இழந்தவர்களுக்கு பல் செட் சரியாக தாடையில் பொருந்துவதில்லை. அடிக்கடி கழன்றுவிடுவதால் இயல்பாகப் பேசவும், சிரிக்கவும், பிடித்ததை சாப்பிடவும் தயங்குவார்கள். இப்படி பற்கள் இழந்தவர்கள் மட்டுமின்றி தளர்வான ஆடும் நிலையில் பற்கள் உள்ளவர்களுக்கும் அதிநவீன ஸைகோமா மற்றும் ஆல் ஆன் 4 சிகிச்சை மூலம் நிரந்தர செயற்கைப் பற்கள் பொருத்தப்படுகிறது.

வெளிநாடுகளில் பயிற்சி பெற்று 60 ஆண்டுகள் அனுபவமுள்ள மூத்த மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன், 40 ஆண்டு அனுபவமுள்ள தேர்ச்சிபெற்ற பல் மருத்துவக் குழுவும், ஒருங்கிணைந்த மருத்துவ வசதிகளும் உலகத்தரத்திலான சிகிச்சையும் எங்களிடம் கிடைக்கிறது. அதிநவீன ஓரல் டிஜிட்டல் ஸ்டென்ட்ஸ், கோன் பீம் சிடி ஸ்கேன், கம்ப்யூட்டர் ஆய்வுகள் மூலம் 4 நாட்களில் நிரந்தர செயற்கைப் பற்கள் பொருத்துகிறோம்.. அதோடு, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் டெண்டல் இம்பளான்ட் பயன்படுத்துவதால், அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்ப சிகிச்சையைத் தேர்வு செய்துகொள்ளலாம்

சர்க்கரை நோய் கட்டுப்படும் வாய்ப்பு

சர்க்கரை நோயாளிகள் பல் ஈறு நோய் காரணமாக முன்கூட்டியே பற்களை இழப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு ஸைகோமா மற்றும் ஆல் ஆன் 4 சிகிச்சை மூலம் நிரந்தர செயற்கைப் பற்கள் பொருத்துவது சிறந்த தீர்வாக இருக்கிறது. ராஜன் மருத்துவமனையில் பொருத்தப்படும் அக்ரலிக் மற்றும் செராமிக் நிரந்தர செயற்கைப் பற்கள் நீண்ட காலம் உழைப்பதுடன், மாறாத முகவடிவம், திருப்தியான உணவுப் பழக்கம், தெளிவான பேச்சு மற்றும் தன்னம்பிக்கை கொடுக்கிறது. இயற்கை பற்கள் போன்று அனைத்து உணவையும் மென்று சாப்பிட முடிவதால் ஜீரணிக்கும் திறன் அதிகரித்து, நோய் பாதிப்புகள் குறைகிறது. மேலும், சர்க்கரை அளவு கட்டுக்குள் வருவதும் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம் ஆகும்.

அழகு சிகிச்சை

எங்கள் மருத்துவமனையில் பற்கள் சீரமைப்பு மட்டுமின்றி தாடை சீரமைப்பு, நாடி சீரமைப்பு, பற்களைப் பழுதாக்காமல் அழகு படுத்துதல், ஈறுகளின் அளவைக் குறைத்து புன்னகையை சரி செய்தல், ஆர்த்தோடாண்டிக்ஸ் எனப்படும் பிரேசஸ் மூலம் பற்களை சீரமைத்தல் போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளித்து முகப்பொலிவை மீட்டுத்தருகிறோம். குறட்டை பிரச்னை உள்ளவர்களுக்கும் நிரந்தரத் தீர்வு அளிக்கிறோம்.

பொதுவாக வாய் புண், கட்டி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனை அவசியம். இதன் மூலம் வாய் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம். வாய் புற்று நோய்க்கும் எங்களிடம் நவீன சிகிச்சை வழங்கப்படுகிறது.

வெளிநாட்டினர் வருகை

நியாயமான கட்டணத்தில் ஒருங்கிணைந்த மருத்துவமனை, ஹைடெக் சாதனங்கள், அனுபவமும் திறமையும் கொண்ட மருத்துவர் குழு இருப்பதால் ராஜன் பல் மருத்துவமனை உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. அதனால் மெடிக்கல் டூரிசமாக இந்தியாவுக்கு வந்து பல் சிகிச்சை பெறும் வெளிநாட்டினரின் முதல் தேர்வாக ராஜன் பல் மருத்துவமனை இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கென்யா, இலங்கை. தென் அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற 55 நாடுகளிலிருந்து எங்களிடம் சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள். வெளிமாநிலத்தவர்கள் வாட்ஸ் ஆப், வீடியோ கால் மூலம் தயக்கமின்றி முதல்கட்ட ஆலோசனை பெறவும் வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது…’’ என்கிறார்.   

மேலதிகத் தகவலுக்கு ;

ராஜன் பல் மருத்துவமனை, 56, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை – 600004. தொலைபேசி ; + 91 97890 01100 இணையம் ; www.rajandental.com இ.மெயில் ; smile@rajandental.com

Leave a Comment