ஜாலிக்கு 5 டிப்ஸ்
ஏதாவது ஒரு கவலை எல்லோருக்கும் இருக்கவே செய்கிறது. அந்த கவலை எந்த அளவுக்கு ஒரு நாளின் அன்றாட செயல்களைப் பாதிக்கிறது என்பதைப் பொறுத்தே, அதன் தீவிரத்தை அறிய வேண்டும்.
பாதை இல்லாத ஊர் என்று எதுவுமில்லை. நோய், எதிரி, தோல்வி, பயம், அச்சம், நிச்சயமற்ற நிலை, அவமதிப்பு, பலவீனம் போன்ற எத்தனையோ காரணங்களால் கவலை உருவாகலாம். கவலை இல்லாத மனிதர்கள் இந்த உலகில் யாருமே இல்லை.. கவலையை எப்படி எடுத்துக்கொள்கிறாகள் என்பதிலே வித்தியாசம் இருக்கிறது. கவலையைப் போக்குவதற்கு உங்களுக்கு ஐந்து வழிகள் உள்ளன.
- எதுவெல்லாம் தவிர்க்க முடியாததோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். விபத்து நடந்துவிட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருந்திருக்கலாம், பிறர் சொன்னதைக் கேட்டிருக்கலாம் என்றெல்லாம் கவலைப்படுவதால், நடந்த விபத்து மாறிவிடப் போவதில்லை. விபத்திலிருந்து எப்படி மீள்வது என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமெ தவிர, விபத்து பற்றி அல்ல.
- இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்யுங்கள். செய்வதற்கு நிறைய வேலைகள் இருப்பவருக்கு கவலைப்படுவதற்கு நேரம் இருப்பதில்லை. எனவே, எதையாவது செய்துகொண்டே இருங்கள். கவலைக்கு நேரம் இருக்காது.
- யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அன்பு, பாராட்டு, நன்றி போன்றவைகளை பிறரிடம் எதிர்பார்த்து ஏமாந்துபோகாதீர்கள். நீங்கள் அன்பு செலுத்துங்கள், பிறரை பாராட்டுங்கள். எதற்கும் பிரதிபலன் பாராமல் இருந்தால் கவலை தோன்றாது.
- எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற அச்சமே நிறைய பேரை பாடாய் படுத்துகிறது. இன்றைய தினத்தில் வாழுங்கள். நாளை நல்லதாகவே நடக்கும் என்பதை உறுதியாக நம்புங்கள். அந்த நம்பிக்கையே கவலையை போக்கடிக்கும்.
- பிறருக்கு உதவி செய்வதற்கு, பிறர் நன்மைக்கு ஏதேனும் செய்யுங்கள். பிறருக்காக வேலை செய்பவருக்கு ஒரு போதும் கவலை எட்டிப் பார்ப்பதில்லை.
