நல்ல வார்த்தைகளில் இருக்கிறது வெற்றி.
தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது.
நல்ல வார்த்தைகளில் இருக்கிறது உறவுகள்
நல்ல வார்த்தைகளில் நிலைக்கிறது நட்பு
நல்ல வார்த்தைகளில் நீடிக்கிறது அன்பு.
ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும்.
ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும்,
ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.
சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும்.
சில சொற்கள் வெற்றி தரும். சில சொற்கள் வேதனை தரும்.
ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்
ஒரு சொல் சமாதானம் செய்யும், ஒரு சொல் போரை உருவாக்கும்..
ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள்.
மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.
