வாழ்க்கையே பாடம் வார்த்தைகளே மந்திரம்

Image

மந்திரச்சொல்

ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பார்கள். அந்த வகையில் வாழ்க்கைக்குத் தெளிவு தரும் மந்திரச் சொற்கள் இவை. படித்துப் பாருங்கள், ரசித்து வாழுங்கள்.

  • கடந்துசென்ற அனைத்தும் பாதைகள் அல்ல, கற்றுக்கொண்ட பாடங்கள்.
  • கூர்மையான வாளாக இருப்பினும் அது கோழையிடம் இருந்து பயனில்லை…!
  • உடல் நலமில்லாத எதிரியை மெய்யன்புடன் சந்தித்து ஆறுதல் சொல். நல்ல நண்பன் கிடைப்பான். 
  • கொஞ்சம் விலகியே இரு, எல்லோருக்கும் நல்லவராக இருக்கமுடியும். எல்லோரும் நல்லவராக இருப்பார்கள்.
  • உன்னை சுற்றியுள்ள அனைவருமே தவறானவர்களாகத் தெரிந்தால், தவறு உன்னிடம்தான் இருக்கிறது.
  • வழியில் கிடப்பவை  எல்லாமே தடையாக இருப்பதில்லை, விடையாகவும் இருக்கலாம்.
  • சாதிக்க விரும்புபவர்களே வெற்றி அடைகிறார்களே தவிர, பிறரை தோற்கடிக்க எண்ணுபவர்கள் அல்ல. 
  • வெற்றி அடைவதற்கு உறவுகளும் நட்புகளும் போதும். சாதனை படைப்பதற்கு  எதிரிகள் தேவை.
  •  வார்த்தைகளுக்கு உருவம் கிடையாது. ஆனால், ஒருவரது இதயத்தை மகிழ்விக்கவும், துன்பப்படுத்தவும் வார்த்தைகளால் முடியும்.
  • உனக்குள் இருக்கும் வலிமையை, உன்னாலும் கற்பனை செய்ய முடியாதது.
  • தவறுகள் வலி கொடுக்கலாம். ஆனால், அது தரும் படிப்பினை வாழ்நாள் முழுவதும் பயன்படக்கூடியது.

Leave a Comment