மந்திரச்சொல்
சில வார்த்தைகள் நம்மைச் செதுக்கும். வேறு சில வார்த்தைகள் நம்ம பலப்படுத்தும். சில வார்த்தைகள் நம்மைப் புண்படுத்தவும் செய்கின்றன.
இந்த கதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதியவர் ஒருவர் தனிமையில் தன் தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார். அதில், ‘சென்ற வருடம் எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை,கணையத்தில் கல் எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகி விட்டதால் வேலையிலிருந்து ஒய்வு. அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார். அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு மருத்துவ தேர்வு எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம்.என்ன ஒரு மோசமான வருடம்’’ என்று எழுதினார்.
இதைப் பார்த்த மனைவி , ‘இவற்றில் சின்ன திருத்தம் செய்து தருகிறேன் என்று எழுதிக்கொடுத்தார். அதில், ‘சென்ற வருடம் நீண்ட நாட்களாக கணையத்தில் இருந்த வலியில் இருந்து விடுதலை பெற்றேன். 60 வயது ஆனதால் வேலையிலிருந்து ஒய்வு பெற்றதால், என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுகிறேன். என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இயற்கை எய்தினார்.
அதே வருடம் என் மகன் விபத்தில் மீண்டு புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய கார் சேதாரமானாலும் என் மகன் எந்த குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான். இந்த வருடம் எனக்கு நல்ல வருடம்…’’ என்று எழுதியிருந்தார்.
அவ்வளவுதான். ஒரே விஷயம். நீங்கள் பார்க்கும் பார்வையைப் பொறுத்து அது நன்மையாகவும் தீமையாகவும் மாறுகிறது. அந்த வகையில் மனதை வலிமையாக்கும் கொஞ்சம் மந்திரச்சொற்கள் இங்கே.
- நாளை சிறப்பாக அமையவேண்டும் என்றால், இன்று சிறப்பான காரியம் செய்யுங்கள்.
- மன்னிப்பதால் கடந்த காலத்தில் நடந்தவைகள் எதுவும் மாறாது. ஆனால், எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை மாற்றலாம்.
- போதிக்கும்போது நீ கற்கவில்லை என்றால், பாதிக்கும்போது கற்க நேரிடும்.
- தன் மீது நம்பிக்கை இல்லாதவரை, கடவுளும் காப்பாற்றுவதில்லை.
- அமைதியைக் கண்டு ஏமாறாதே. வெடிப்பதற்கு முன்பு வெடிகுண்டுகளும் அப்படித்தான் இருக்கும்.
- நிழல் போன்று பிரியாதவரும், கண்ணாடி போன்று உண்மையை மட்டும் பேசுபவரே நல்ல நண்பர்.
- ஒரு மனிதனுக்குக் கொடுக்கும் மிகப்பெரும் தண்டனை, மன்னிப்புதான்.
- முடியாது, நடக்காது என்பதையெல்லாம் யாரேனும் ஒருவர் செய்துகொண்டுதான் இருக்கிறார்.
- எத்தனை வலித்தாலும் தாங்கிக்கொள்பவனுக்கு, வலியும் இனிமையே
- கடமையை செய்துவிட்டு பாராட்டை எதிர்பார்க்காதே.