இந்த கலியுகம் முடிந்ததும் உலகம் அழிந்துவிடுமா..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : ஆசை துன்பமா… இன்பமா… உங்கள் தீர்ப்பு என்ன..?

  • பி.மாணிக்கவாசகம், விருதுநகர்.

ஞானகுரு :

இன்று நிறைவேற்றிக்கொள்ள முடியும் அளவுக்கு ஆசைப்படுவது ரொம்பவே நல்லது. நாளைக்கும் எதிர்காலத்திற்கும் தேவை என்று தகுதிக்கும் மீறி ஆசைப்படுவதே துன்பத்திற்கு காரணமாகிறது. பொதுவாகவே சின்னச்சின்ன ஆசைகள் நல்லது. அவையே இன்றைய வாழ்க்கையை இனிமையாக்குகின்றன.

கேள்வி : கலியுகம் நடக்கிறதா..? இந்த உலகம் விரைவில் அழிந்துவிடுமா..?

  • எம்.பார்வதி, வ.உ.சி. நகர்.

ஞானகுரு :

கண்ணன் இறந்த நாளில் கலியுகம் தொடங்கியதாக வேதங்கள் சொல்கிறது. அதாவது கி.மு.3102ல் தொடங்கி இப்போது வரை கலியுகம் நீடிக்கிறது. இந்த கணக்குப்படி கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் போன்ற அனைத்தும் சேர்ந்து 43 லட்சம் ஆண்டுகள் கொண்டது ஒரு மகாயுகம். இதுபோல் 72 மகாயுகம் முடிந்ததும் உலகம் அழியும் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம், இந்த பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என்று அறிவியல் கணிக்கிறது. மனித இனம் உருவாகி 3 லட்சம் வருடங்களே ஆகிறது. மனிதனைப் போன்று எத்தனையோ உயிரினங்கள் தோன்றி, மறைந்து போயிருக்கின்றன. கொரோனா போன்ற ஒரு தீவிரத் தொற்று வந்தால் ஒட்டுமொத்த மனித குலமும் செத்துப் போகலாம். நோய்களில் இருந்து தப்பிப் பிழைத்தாலும் 100 முதல் 150 கோடி ஆண்டுகளில் அதீத வெப்பம் காரணமாக மனிதர்கள் வாழமுடியாத சூழல் உருவாகலாம். ஆனால், இந்த பூமி முழுமையாக அழிந்து சாம்பலாவதற்கு இன்னமும் 500 கோடி ஆண்டுகள் ஆகலாம். எனவே, கவலைப்படாமல் நிம்மதியாக வாழுங்கள்.

Leave a Comment