• Home
  • சர்ச்சை
  • துட்டுக்காக காலில் விழலாமா கார்த்தி..?

துட்டுக்காக காலில் விழலாமா கார்த்தி..?

Image

லட்டுக்கு பகிரங்க மன்னிப்பு

திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. கோயிலை பசு கோமியத்தால் கழுவுவதும் விளக்கு ஏற்றுவதும் என பா.ஜ.க.வினர் படு பிஸியாக இதில் அரசியல் செய்துவருகிறார்கள். இந்த நிலையில் செய்யாத தப்புக்கு நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டிருப்பது அவர் மீதான ஒட்டுமொத்த மதிப்பையும் தமிழகத்தில் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒரு சினிமா விழாவில் லட்டு பற்றி பேச்சு வந்ததுமே, அது ஒரு சென்சிடிவ் பிரச்னை என்பதால் அது பற்றி பேச நான் விரும்பவில்லை என்று சிரித்துவைத்தார் நடிகர் கார்த்தி. உடனே இதற்கு ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் கடுமையான மொழியில் கண்டனம் தெரிவித்தார்.

இந்த வாரம் அவரது மெய்யழகன் படம் அங்கேயும் ரிலீஸ் ஆகவேண்டியிருப்பதால், எந்த தப்புமே செய்யாமல் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த விவகாரம் தமிழகம் முழுக்க பேசுபொருளாகியுள்ளது.

அவரது ரசிகர்கள், ‘’லட்டு பிரச்னை சென்சிடிவா இருக்கு அதனால் கருத்து சொல்ல மாட்டேனு டீசன்டாதான கார்த்தி சொன்னார் இதற்கு ஏன் பவன் கல்யாண் கதர்றார். சங்கிகளது லாஜிக்கே புரியல. எதாவுது தப்பா பேசுனதுக்கு மன்னிப்பு கேட்ருந்தா கூட பரவால்ல, தப்பே செய்யாம அவன் பொலிடிக்கலா ட்விஸ்ட் பண்ணதுக்குலாம் மன்னிப்பு கேட்டுட்டு இருக்காரு. இவரை நம்பியா ஃபயர் விட்டுட்டு இருந்தோம்’’ என்று கொதிக்கிறார்கள்.

Leave a Comment