பொண்டாட்டிக்கு மஞ்ச புடவை

Image

ஸ்பெஷல் ஜோக்ஸ்

அவன் :  பகல்ல ஆபிஸ்ல தூங்குனா கெட்ட கனவா வருது…

இவன் : அப்படி என்ன கனவு வந்திச்சு..?

அவன் : கஷ்டப்பட்டு வேலை பார்க்கிற மாதிரி கனவுப்பா…

……………….

அவன் : நான் தினமும் 10 கிலோ மீட்டர் வாக்கிங் போவேன், நீங்களும் போங்க உடம்புக்கு நல்லது…

இவன் : சார், நடந்தேதான் போணுமா..?

……………………

அவன் : அந்த புரோக்கர் மீனம்பாக்கத்தில் இருந்து அரை மணி நேரத்தில் போயிடலாம்னு சொன்னதை நம்பி இடம் வாங்கிப் போட்டது தப்பாப் போச்சு

இவன் : ஏன், என்னாச்சு?

அவன் : ஃப்ளைட்ல அரை மணி நேரம் போகணுமாம்.

……………………..

அவன் : என்னடா, லவ் பெயிலியர் ஆயிடுச்சா…?

இவன் : ஆமாம்டா, காதலிச்சவளையே கல்யாணம் பண்ணவேண்டியதாப் போச்சே.

 ……………………

மனைவி : என்னங்க, உங்களுக்குத்தான் எம் மேல எவ்வளவு ஆசை. இப்படி மஞ்ச புடவை வாங்கிட்டு வந்திருக்கீங்க.

கணவன் : மஞ்ச புடவை வாங்கிக் குடுக்கலைன்னா, நீயே அடுத்த பிறவியிலும் என் மனைவியா வந்துடுவேன்னு ஜோசியக்காரன் சொன்னானே…

………………………………..

அவள் : எதுக்குடி, நீ சொன்ன மாதிரி பூ வாங்கிட்டு வந்ததுக்கு உன் புருஷனை திட்டிட்டு இருக்கே…

இவள் : ஜாலியா இருக்கலாம்னு மல்லிகைப் பூ வாங்கிட்டு வரச்சொன்னா, காலிஃப்ளவர் வாங்கிட்டு வந்திருக்காருடி.

Leave a Comment