• Home
  • சர்ச்சை
  • நடராஜனுக்கு இந்திய அணியில் ஏன் இடமில்லை?

நடராஜனுக்கு இந்திய அணியில் ஏன் இடமில்லை?

Image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை என்ற ஆதங்கமே முடியாத நிலையில், டி20 உலகக் கோப்பை இந்திய அணியிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்ரிநாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். “தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இருமடங்கு சிறப்பாக விளையாடி தங்களை நிரூபித்தால் மட்டுமே அணியில் இடம் கொடுப்போம் என்ற பாரபட்சம் ஏன்? டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெற்றிருக்க வேண்டும்.  பிற மாநில வீரர்களைப் போல தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஏன் கூடுதல் ஆதரவு கிடைப்பதில்லை? தனிப்பட்ட முறையில் நானும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். 

இதனை யாரும் வெளிப்படுத்துவதில்லை என்பதால் நான் பேசுகிறேன். 500 விக்கெட் வீழ்த்திய அஸ்வினை கேள்வி கேட்கிறார்கள். டெஸ்ட் வரலாற்றில் சிறந்த டாப் 5 தொடக்க வீரர்களில் முரளி விஜய் உள்ளார். அவர் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் கேள்வி கேட்கிறார்கள். இதுகுறித்து கேள்விகள் ஏன் எழவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது.” என்று பேசியிருக்கிறார்.

நடராஜனை நிச்சயமாக உலகக் கோப்பை அணியில் சேர்த்திருக்கவேண்டும் என்று நிறைய பேர் ஆதங்கம் தெரிவித்திருக்கிறார்கள். ஏனென்றால், மேற்கிந்திய தீவுகளில் நடைபெறப் போகும் போட்டிகளுக்கு நான்கு சுழல்பந்து வீச்சாளர்கள் தேவையே இல்லை. எனவே, வேகப்பந்து வீச்சாளரை எடுத்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

தமிழர்கள் என்றாலே பிசிசிஐக்கு இளக்காரம் தான்.

Leave a Comment