பித்தப்பையில் கற்கள் ஏன்?

Image

கல்லீரலுக்குக் கீழ் பேரிக்காய் வடிவத்தில் அமைந்திருக்கும் உறுப்பு பித்தப்பை. இந்தப் பித்தப்பையில் கல் சிக்கி அடைப்பு ஏற்படும் சமயத்திலும், பித்தப்பை அளவு பெரிதாகும் நேரத்திலும் தாங்கமுடியாத அடி வயிற்றின் வலது பக்கத்தில் வலி ஏற்படலாம். சிலருக்கு வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

பித்தப்பைக் கற்கள் பொதுவாக கொலஸ்ட்ரால் அல்லது பிலிரூபினால் ஆனவை. கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் கற்கள் உருவாகலாம். பழைய ரத்த சிவப்பணுக்கள் உடைத்து அதிக அளவில் பிலிரூபினை கல்லீரல் உற்பத்தி செய்தாலும் பித்தப்பை கற்கள் உருவாகலாம்.

பித்தப்பையில் கற்கள் இருந்தாலே அதனை அகற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. வலி போன்ற அறிகுறி காட்டாதவர்களுக்கு சிகிச்சை தேவையில்லை. பித்தப்பை கற்களின் அளவு மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்தே அமைகிறது.

பித்தப்பையில் கற்கள் இருப்பதை ரத்தப்பரிசோதனை, அடிவயிற்றுப் பரிசோதனை மற்றும் கொலனோஸ்கோபி மூலம் கண்டறியலாம். பெரும்பாலும் மருந்துகள் மூலமே பித்தப்பை கற்களை கரைக்க முடியும். நாட்பட்ட நிலையில் அல்ட்ராசவுண்ட் எனப்படும் லித்தோட்ரிப்ஸி அல்லது அறுவை சிகிச்சை அவசியமாகிறது.

நீரிழிவு மற்றும் ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றால் பித்தப்பை கற்கள் பிரச்னைக்கு வாய்ப்பு உண்டு. கருத்தடை மாத்திரைகள், மாதவிடாய் மாத்திரைகள் எடுப்பவர்களுக்கும் கற்கள் தோன்றலாம்.

Leave a Comment