பயம் வந்தால் வயிறு கலங்குவது ஏன்?

ஹெல்த் பத்திரமா பாத்துக்கோங்க

இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளை எல்லாம் பெரிதும் மதிக்கும் மனிதர்கள், குடலுக்கு அத்தனை முக்கியத்துவம் தருவதில்லை. கழிவுகள் தேங்கியிருப்பதால் குடலை அசுத்தமான உறுப்பாகக் கருதுகிறார்கள். ஆனால், மனிதரின் இரண்டாவது மூளை என்று குடலை புனிதப்படுத்துகிறது மருத்துவம்.

குடலின் உள்ளே சுமார் 100 மில்லியன் நரம்புகள் உள்ளன. எனவே, மனநிலை, நினைவுத்திறன், கோபம், அமைதி போன்ற உணர்வுகளை எல்லாம் மூளையைப் போன்று குடலும் கட்டுப்படுத்துகிறது. அதனாலே இதை சிறிய மூளை என்கிறார்கள்.

குடலில் உள்ள நுண்ணுயிரிகளே மகிழ்ச்சி, பயம் தரக்கூடிய ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. அதனால் கெட்ட செய்தி கேட்டதும் வயிறு கலங்குகிறது. குடல் ஆரோக்கியத்திற்கு தயிர், முருங்கைக்காய், இஞ்சிசாறு போன்றவை நன்மை தருகிறது. அதோடு சீரான தூக்கமும் போதிய தண்ணீர் குடிப்பதும் வயிறுக்கு நல்லது.

Leave a Comment