• Home
  • காமம்
  • உடலுறவில் ஆண்கள் மட்டும் ஏன் சாகிறார்கள்..?

உடலுறவில் ஆண்கள் மட்டும் ஏன் சாகிறார்கள்..?

Image

பாலியல் பாடம்

தூக்கத்தில் மரணம் அடைபவர்கள் போலவே உடலுறவு நேரத்தில் அல்லது உறவு முடிந்தவுடன் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பாலியல் ரீதியான பிரச்னைகளில் 32 பேர் மரணம் அடைகிறார்கள் என்றால், அதில் 30 பேர் ஆண்கள் என்பது தான் அதிர்ச்சியான தகவல்.

உடற்பயிற்சி போலவே உடலுறவும் ஆண்களின் இதயத்துக்கு அதிக துடிப்பும் அதிக ரத்தவோட்டமும் தரக்கூடியது. அதோடு மனதளவிலும் அதிக ஆர்வத்துடன் எமோஷனல் ஆவதால் ரத்த ஓட்டம் எக்குத்தப்பாக அதிகரித்து ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது. போதுவாக, இதயம் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருபவர்களுக்கு மருத்துவர்கள் முன்கூட்டியே தேவையான எச்சரிக்கை கொடுக்கிறார்கள். ஆனால், நிறைய பேர் இதயம் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறியாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நபர்களே இது போன்ற ஆபத்தில் சிக்குகிறார்கள்.

அதீத ஆர்வத்துடனும் துடிப்புடனும் உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு மூளைக்கு ரத்தவோட்டம் ஆக்சிஜன் கிடைப்பதில் குழப்பமடைந்து ஸ்ட்ரோக் வருகிறது. ரத்தக்குழாய் வெடிப்பதன் காரணமாகவும் உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.

செக்ஸ் விளையாட்டின் மீதான ஆர்வம் காரணமாக சிலர் வயாகரா போன்ற வீரிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி எடுத்துக்கொள்கிறார்கள். இந்த மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் சிலர் உற்சாகத்துடன் அளவு தெரியாமல் குடித்துவிட்டு ஆவேசமாக இயங்குவதும் உயிருக்கு ஆபத்து உண்டாக்குகிறது. கஞ்சா, அபின், கோகெயின் போன்ற போதை பொருட்களை எடுத்துக்கொள்பவர்கள் தொடர்ந்து இயங்குவது ரத்தவோட்டத்தைப் பாதித்து அபாயத்தை உருவாக்குகிறது.

செக்ஸ் வீடியோக்களைப் பார்த்து அதே பாணியில் இயங்குவது நிறைய பேருக்கு திடீர் சிக்கலை உருவாக்குகிறது. அந்த வீடியோகளில் உள்ளவை எல்லாமே சித்தரிக்கப்பட்டவை என்பதும் எடிட் செய்யப்பட்ட பொய்யான காட்சிகள் என்பதை அறியாமல், அதே பாணியில் வித்தியாசமான உறவுகள் மேற்கொள்வது உயிருக்கு ஆபத்தை உருவாக்கலாம். குறிப்பாக பிடிஎஸ்எம் எனப்படும் சாடிஸ்ட் வகை வீடியோக்கள் அதிகம் உலவுகின்றன. அந்த வீடியோக்களில் உள்ளது போல் எளிதாகச் செய்யலாம் என மேற்கொள்ளும் முயற்சிகள் உயிருக்கு உலை வைக்கின்றன. இந்த வகையில் சில பெண்களும் உயிர் இழக்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய எச்சரிக்கை.

பொதுவாக உடலுறவு என்பது இன்பம் தரக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கள்ளக் காதலில் ஈடுபடும் நபர்கள் பிறருக்குத் தெரியாமல் ரகசியமாகவும், அவசரத்திலும், பயத்திலும் இயங்குவது அளவுக்கு அதிகமான ரத்தவோட்டத்தைத் தூண்டுகிறது. அதோடு பிறரை பற்றிய அச்சம், ஸ்ட்ரெஸ் இருப்பதால் உயிருக்கு ஆபத்து நேரலாம். சூப்பர் டீலக்ஸ் படத்தில் இந்த வகை உறவு காரணமாக மரணம் நிகழ்வதை காட்டியிருப்பார்கள்.

இதய நோய்க்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் என்றாலும் அதீத இயக்கம் ஆபத்தாக முடியலாம். ஆகவே, ரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள், இதயம் தொடர்பான சிக்கல்கள், ஆஸ்துமா போன்ற பிரச்னையில் இருப்பவர்கள் உறவு கொள்ளும்போது இயல்பாகவும், எளிதாகவும் இயங்கவேண்டியது அவசியம். நோய் இருப்பதை தங்கள் பார்ட்னருக்கு தெளிவாக உணர்த்துவதும் அவசியம். பெண் ஆவேசமாக இயங்குவதை தாங்க முடியாமலும் ஆண்கள் உயிர் இழக்க நேரிடலாம்.

படுக்கை என்பது மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கட்டும், மரணப்படுக்கையாக மாறிவிட வேண்டாம்.

Leave a Comment