• Home
  • அரசியல்
  • கொலையாளிக்கு எடப்பாடி, சீமான், அண்ணாமலை ஆதரவு ஏன்?

கொலையாளிக்கு எடப்பாடி, சீமான், அண்ணாமலை ஆதரவு ஏன்?

Image

விடுதலை சிறுத்தைகள் நறுக் கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நேரத்தில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் போலியான குற்றவாளிகளை காவல் துறை கைது செய்திருப்பதாக அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி, பா.ஜக.வின் அண்ணாமலை, நாம் தமிழர் சீமான் ஆகியோர் சொல்வதாக குற்றம் சாட்டினார்கள்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய திருவேங்கடம் என்று தப்பியோடிய நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் ஆகியோர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, ‘’ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நேரடி சம்பந்தப்பட்டுள்ள கொலையாளி திருவேங்கடம் இன்று காவல்துறை மோதலில் கொல்லப்பட்டுள்ளான்.

காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து அ.தி.மு.க. தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் நா.த.க. சீமான் அவர்களும் ஒரே மாதரி ஒரே குரலில் கொலையாளிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

அதாவது, கொலையாளி திருவேங்கடம் நேரடியாக ஆம்ஸ்ட்ராங் அவர்களை வெட்டும் காட்சி வெளியாகியுள்ளது. அப்படி நேரடி தொடர்பில் உள்ள கொலையாளிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது, தலித் விரோதப்போக்காகும்.

தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் ஆருத்ராவும் பாஜகவும் இருக்கிறது என்பதை எமது தலைவர் எழுச்சித்தமிழர் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் சொல்லாமல், குற்றவாளிகளை பாதுகாக்கும் பணியில் ஒன்றிணைவதை தலித் இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக, அண்ணாமலையும் சீமானும் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment