• Home
  • சர்ச்சை
  • வினேஷ் போகத் முதுகில் குத்தியது யார்..?

வினேஷ் போகத் முதுகில் குத்தியது யார்..?

Image

மோடியின் செய்திக்கு கடும் எதிர்ப்பு

வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தின் உண்மை பின்னணியை உலகிற்கு முன் வைத்து இந்திய மக்கள் அத்தனை பேரும் போராட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துவருகிறது. பாகுபலிக்குப் பதிலாக வினேஷ் போகத் இருக்கும் படம் செம வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் மோடி வினேஷ் போகத்திற்கு இது ஒரு தற்காலிகப் பின்னடைவு என்று பிரதமர் மோடி அனுப்பியிருக்கும் செய்தி, கடுமையான ஆத்திரத்தை வினேஷ் போகத் ஆதரவாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது இது தானா என்று கேள்வி எழுப்புகிறார்கள். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கொண்டாடுவது போன்று இந்த செய்தி இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோவை விட 100 கிராம் கூடுதலாக இருந்ததால் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க ஒலிம்பிக் சங்கம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் இம்முறை மல்யுத்தம் 50கிலோ எடைப்பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் மட்டுமே வழங்கப்படவுள்ளது.

இதுவரை ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இறுதிச்சுற்று வரை எந்த வீராங்கனையும் சென்றதில்லை இதை சாதித்து காட்டினார் வினேஷ் போகத். ஆனால் இப்போது இந்தியா தங்கம் வெல்லும் கனவு தகர்ந்துள்ளது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் பல்வேறு கேள்விகளை சந்தேகங்களை எழுப்புகிறது, காரணம் அவர் வெறும் விளையாட்டு வீராங்கனை மட்டுமல்ல பெண்கள் மீது நடந்த சமூக அநீதியை எதிர்த்து போராடிய போராளியும் கூட.

அவருடைய வெற்றி என்பது பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தந்த பிரஜ் பூசனுக்கும், அவரது அநீதிக்கு துணை போன ஆளும் பாஜகவிற்கும் முகத்தில் விழும் பலமான அடியாக இருந்திருக்கும், இந்த அவமானத்தை தவிர்க்கவே ஆளும் தரப்பிற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உதவியுள்ளதா ? அல்லது இந்திய ஒலிம்பிக் கமிட்டி சதி செய்துள்ளதா என பல கோணங்களில் கேள்விகள் எழுகிறது.

எனவே வினேஷ் போகத்தின் வார்த்தைகளுக்கு அவருடைய கருத்துகளுக்கு இந்தியாவின் நாட்டுபற்றாளர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். போராளிகள் ஓய்வதில்லை, வீராங்கனை வினேஷ் போகத் அடிப்படையிலேயே ஒரு போராளி என்பதால் கண்டிப்பாக அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அவர் போராட வேண்டும். அப்போது மீண்டும் இந்த ஆளும் தரப்பு அம்பலப்படுத்தபடும். வினேஷ் போகத்துக்கு இந்திய மக்கள் ஆதரவாக நிற்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

Leave a Comment