வீட்டில் தலைமையேற்க வேண்டியது கணவரா… மனைவியா..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : வீட்டில் சிதம்பரம் ஆட்சி நல்லதா அல்லது மீனாட்சி ஆட்சி நல்லதா..?

  • என்.சரவணன், லட்சுமிநகர்.

ஞானகுரு :

யாரேனும் ஒருவர் மனப்பூர்வமாக மற்றொருவரை தலைவராக ஏற்றுக்கொள்வதே நல்ல குடும்பம். அந்த தலைவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்ல ஆட்சியே.   

கேள்வி : புகழ் மாலை சூடுவதற்கு சிலர் பேயாக அலைவது ஏன்..? இது நல்லதுதானா..?

  • எம்.வடிவேல், சசிநகர், சிவகாசி.

உழைப்பை கொடுத்து பணம் வாங்கிவிடலாம். ஆனால் பணம் கொடுத்தாலும் எளிதில் புகழை வாங்கிவிட முடியாது. அதற்கு காத்திருக்கும் காலம் அதிகம். அப்படி வாராது வந்த மாமணியை இழப்பதற்கு பயந்தே, அதனை கெட்டியாக பிடித்துக்கொள்கிறார்கள். புகழுக்கு ஆசைப்படுபவர்கள் வெளிப்படையாக தவறுகள் செய்வதற்குத் தயங்குவார்கள், எனவே அவர்கள் அப்படியே இருக்கட்டும்.

கேள்வி : பணம் இருந்தும் பிறருக்கு கொடுக்க மனம் மறுப்பது ஏன்..?

  • பி.மாரிமுத்து, அல்லம்பட்டி.

ஞானகுரு :

அவரவர் பசிக்கு அவர் மட்டுமே சாப்பிட வேண்டும். அறிவை, அன்பை தானமாகக் கொடுக்கலாம். பணத்தை யாருக்கும் தரவேண்டிய அவசியமில்லை. தகுதியுள்ளவர், அதனை அடைந்துவிடுவார்கள்.

கேள்வி : சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் எவையெவை..?

  • கே.விஜயலட்சுமி, என்.ஜி.ஓ. காலனி.

ஞானகுரு :

1639ம் ஆண்டுதான் சென்னை உருவாக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. எனவே, சென்னையில் வரலாற்றுச் சின்னங்களாக சிறப்புமிக்கது அதிகமில்லை. சென்னையின் அழகைக் காண மெரினா கடற்கரை ஒன்றே போதும். 

Leave a Comment