• Home
  • அரசியல்
  • உண்டியலில் விழுந்த செல்போன் யாருக்கு சொந்தம்..?

உண்டியலில் விழுந்த செல்போன் யாருக்கு சொந்தம்..?

Image

இந்த காலத்திலும் இப்படி பேசலாமா அமைச்சர்..?

கோயில் உண்டியலில் கை தவறி போடப்பட்ட பொருட்கள் கோயிலுக்கே சொந்தம் என்று கூறப்படுவதுண்டு. அந்த வகையில் கை தவறி விழுந்த செல்போனை திருப்பித்தருவதற்கு அறநிலையத் துறை தயக்கம் காட்டுவது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் உண்டியல் திறக்கப்பட்ட நேரத்தில், பணத்துடன் ஒரு செல்போனும் இருந்தது கண்டறியப்பட்டது. விலையுயர்ந்த அந்த போன் அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

அவர் செல்போனை பெற முயன்றதற்கு கோவில் நிர்வாகத்தினர் உண்டியவில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே சொந்தம் என்று கூறி செல்போனை திருப்பி கொடுக்க மறுத்துவிட்டனர்.

அமைச்சர் சேகர் பாபுவும், ‘அறநிலையத்துறை விதிகளை ஆராய்ந்து, சாத்தியக்கூறு இருந்தால் செல்போனை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்திருக்கிறார்.

வேறு ஒருவர் போட்ட தங்கம், வெள்ளி போட்ட அன்பளிப்பை ஏமாற்றி யாரும் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் அது. ஏனென்றால் தங்கம், வெள்ளி போன்றவைகளின் உண்மையான சொந்தக்காரர்களை அடையாளம் காண இயலாது. இதனை செல்போனுக்கும் பொருந்தும் என்று கூறுவது அபத்தமான கருத்து. ஏற்கெனவே ஆறு மாதமாக காத்திருக்கும் சொந்தக்காரரிடம் செல்போனை உடனடியாக ஒப்படைப்பதே சரியாக இருக்கும்.

இதற்கெல்லாம் ஆராய்ச்சி, நீதிமன்றம் என்பதெல்லாம் சரியா..? இது தான் திராவிட மாடலா..?

Leave a Comment