• Home
  • அரசியல்
  • குழப்பவாதி திருமாவளவனுக்கு சாட்டையடிக் கேள்விகள்.

குழப்பவாதி திருமாவளவனுக்கு சாட்டையடிக் கேள்விகள்.

Image

மாநில உரிமைக்கு வேட்டு வைக்கலாமா..?

இட ஒதுக்கீடு விவகாரத்தில் திருமாவளவன் பேசிவரும் கருத்துக்கள் கடும் எதிர்ப்பை உருவாக்கிவருகிறது. உள் ஒதுக்கீட்டை மாநில அரசு கையில் ஒப்படைக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்தை கடுமையாக எதிர்க்கிறார்.

அதேநேரம், ‘எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் தலித் ஒருவரால் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது. இதை விவாதித்தால், நாடாளுமன்றத்துடன் இந்த அதிகாரம் ஏன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். மாநில அரசு எந்தச் சூழலிலும் ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்கிற நிலை இங்கே இல்லை, வர முடியாது,” என்றும் பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் கணேஷ் பாபு எழுப்பியிருக்கும் கேள்விகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‘பட்டியல் சமூகத்தினருக்கான இட-ஒதுக்கீடு/உள்-ஒதுக்கீடு தொடர்பான அதிகாரங்கள் ஒன்றிய அரசிடமும், ஜனாதிபதியிடமும் இருந்தால்தான் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்’ என்ற வாதத்தை முன்வைக்கும் திருமாவளவன் வாதம் எவ்வளவு அபத்தமானது, ஆபத்தானது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

  • அந்த அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் இருந்தால் அதை அவர்கள் தங்களின் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி தலித்துகளை பிரித்துவிடுவார்கள்” என்கிறார். ஒன்றிய அரசு அரசியல் லாபத்திற்காக எதையும் செய்யாதா? ‘மாநில அரசுகள் எல்லாம் தலித் ஒற்றுமையை சீர்குலைப்பதில் முனைப்பாக இருக்கும். ஆனால் ஒன்றிய அரசு தலித் மக்களின் ஒற்றுமையை போற்றிப் பாதுகாக்கும்’ என்பதற்கு என்ன ஆதாரம்?
  • அந்த அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் இருந்தால் அதைப் பயன்படுத்தி அவர்கள் இட-ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்துவிடுவார்கள் என்கிறார். இன்றும் சரி, இதற்கு முன்பும் சரி.. இந்த நாட்டில் இட-ஒதுக்கீட்டிற்கு எதிரான பெரும் ஆபத்துகள் யாரால் ஏற்பட்டது/ஏற்படுகிறது? ஒன்றிய அரசாலா? மாநில அரசுகளாலா?
  • திமுக மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் பிற மாநில அரசுகள் திமுக அரசு போல அல்ல. மேலும், மாயாவதி போன்ற அரிதினும் அரிதான நிகழ்வுகளைத் தவிர எந்தக் காலத்திலும் தலித்துகள் மாநிலத்தின் முதலமைச்சராக வரமுடியாது. ‘இந்த விசயத்தில் பிற மாநில அரசுகள் திமுக அரசு அளவுக்கு யோக்கியமாக செயல்பாடது’ என்கிற‌ உங்கள் அச்சத்திற்காக தமிழ்நாடு அரசு ஏன்‌ தனது அதிகாரத்தை இழக்க வேண்டும்? தமிழர்கள் ஏன்‌ பாதிக்கப்பட‌ வேண்டும்?
  • ‘மாயாவதி முதல்வரானதால் உ.பியில் தலித் மக்கள் அடைந்த மேன்மை என்ன?’ என்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால் ‘மாயாவதி போல அரிதினும் அரிதாகத்தான் தலித் தலைவர்கள் முதல்வராக முடியும். அதனால் மாநில அரசுகளிடம் இந்த அதிகாரம் இருக்கக் கூடாது’ என்று வாதிடும் நீங்கள், அப்படி அரிதினும் அரிதாகக் கூட இதுவரை தலித்துகள் பிரதமராக ஆக முடியாத நிலையில் ஒன்றிய அரசிடம் இந்த அதிகாரங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று எப்படி நம்புகிறீர்கள்?
  • ‘இந்திய தேசியம்‌ என்பதே யாருடைய கட்டமைப்பு? ஒன்றிய அரசு எப்போதும் யாருடைய கட்டுபாட்டில் இருந்திருக்கிறது?’ என்பதெல்லாம் இந்த நாட்டு அரசியல் சூழலின்‌ அடிப்படை அம்சங்கள். இப்படியொரு சூழலில், சமூகநீதி தொடர்பான ஒரு அதிகாரம் ஒன்றிய அரசிடமும், ஜனாதிபதியிடமும் இருந்தால்தான் அது பத்திரமாக இருக்கும் என்று வாதிடுவதற்கெல்லாம் ஒரு மன தைரியம் வேண்டும்.
  • சின்னச் சின்ன விசயங்களில் கூட கொள்கைக் குன்றுகளாக மாறி திமுகவுக்கு அட்வைஸ் செய்யும் அறிவுஜீவிகள் ஒருவர் கூட மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும்‌ முற்றிலும் எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டை பெயரளவுக்குக் கூட கண்டிக்கவில்லை என்பது ஆச்சர்யம் என்கிறார்.

இதற்கெல்லாம் திருமா பதில் சொல்வாரா அல்லது ரவிக்குமார் பாணியில் 1954 என்று அந்தக் காலக் கதையை பேசி சமாளிக்கப் போகிறாரா..?

Leave a Comment