வாழ்க்கையை புரிய வைக்கும் இடம் எது?

ஞானகுரு பதில்

கேள்வி : குறுகிய காலத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கு எங்கு செல்ல வேண்டும், என்ன கற்க வேண்டும்..?

  • பி.ராமநாதன், கிணத்துக்கடவு

ஞானகுரு :

வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் தேடுதலும் வந்துவிட்டாலே விடை கிடைக்கத் தொடங்கிவிடும். வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் ஈஸியான ஒரு வழி இருக்கிறது. அது கெளதம புத்தர் காடிய வழி.

சீடர்களுக்கு தீட்சை கொடுப்பதற்கு புத்தர் ஒரு வழியை பின்பற்றி வந்தார். அதாவது, ஏதாவது ஒரு மயானத்தில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, உடல்கள் எரிவதையும் உறவினர்கள் நடந்துகொள்வதையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

ஏனென்றால் இந்த உடலுக்காக, இன்பத்துக்காக மனிதர்கள் அலைவதும் கவலைப்படுவதும் எத்தனை அறியாமை என்பது மயானத்தில் தெரிந்துவிடும். மரணத்தைப் புரிந்துகொள்பவராலே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ முடியும். அதனால் வாழ்க்கை புரிய வேண்டும் என்றால் நீங்கள் மயானத்தில் ஒரு சில நாட்கள் வேடிக்கை பாருங்கள். அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கு அருகில் சில நாட்கள் நின்று பாருங்கள். வாழ்க்கை எத்தனை விசித்திரமானது என்பது புரிந்துவிடும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.  

Leave a Comment