உடல், மனம் எது வலிமையானது?

ஞானகுரு பதில்

கேள்வி : மனம், உடல் இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்..?

  • எம்.முத்துலட்சுமி, மதுரை.

ஞானகுரு :

உடலுக்கு அளப்பரிய சக்தி உண்டு. மனசுக்கு மிகப்பெரும் ஆற்றல் உண்டு. உடலை மனமும், மனதை உடலும் ஒன்றையொன்று அடிமையாக்குவதற்குப் போராடிக்கொண்டே இருக்கும். நீங்கள் எதன் பக்கம் இருக்கிறீர்களோ, அதுவே முக்கியத்துவம் பெறுகிறது.

பொதுவாக உடலை தோற்கடிப்பது மிக எளிது. உடம்பைக் காயப்படுத்துவதும் சுலபம். ஆனால் மனதை தோற்கடிப்பதும், காயப்படுத்துவதும் கடினம்.

ஒருவர் திட்டுவதை சீரியஸாக எடுத்துக்கொள்பவருக்கு மனம் வருத்தப்படும். திட்டுவதை மதிக்காத நபருக்கு மனம் பலமாக இருக்கிறது. அதாவது, ஒருவர் அனுமதித்தால் மட்டுமே அவரது மனம் காயப்படும். அதனால் தான் கொடூர வியாதி பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சிலர் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு இயல்பாக சிரிக்கிறார்கள். சிலர் தலைவலிக்கே முடங்கிப் படுக்கிறார்கள்.

ஆகவே, முதலில் மனதை வலுப்படுத்துங்கள். அதன் மூலம் உடம்பை ஆரோக்கியமாக வைத்திருங்கள். அதுவே, மகிழ்ச்சி.

Leave a Comment