யார் அந்த சார்..?
அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்தது பெரும் கொடூரம் என்றால், அதைவிட கொடூரமாக அந்த நிகழ்வின் எஃப்.ஐ.ஆர். லீக் ஆகியுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவியின், பெயர் முகவரி முதலான அத்தனை விஷயங்களும் வெளியே வந்துள்ளன. அந்த எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்படும் இரண்டாவது குற்றவாளி இன்னமும் பிடிபடவில்லை என்பது மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்ணா பல்கலையில் காதலர்கள் பேசிக்கொண்டும், முத்தம் கொடுத்தும் இருக்கிறார்கள். இதை வீடியோ எடுத்து மிரட்டியிருக்கிறான். அந்த வீடியோவை டீன் மற்றும் பேராசிரியரிடம் காட்டி டிசி தரவைப்பேன் என்று மிரட்டியிருக்கிறான். மாணவியின் செல்போனை பறித்து அதிலிருந்து மாணவி தந்தையின் செல்போன் எண்ணை எடுத்து, அவருக்கு அந்த வீடியோ அனுப்பிவைப்பேன் என்று மிரட்டியிருக்கிறான். பணம் தருகிறோம் என்று இருவரும் கெஞ்சியபோதும் அவன் விடவில்லை. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை சமூகவலைதளங்களில் பதவிட்டு விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறான்.
அந்த பெண்ணை காதலன் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி இன்னொரு நபரையும் திருப்தி படுத்தக் கூறியிருக்கிறான். யார் அந்த SIR என்பது தான் கேள்வியே.. Highway Lab Building-ல் வைத்து மிரட்டும்போது, என் கூட கொஞ்ச நேரம் இரு, அந்த Sir கூட கொஞ்ச நேரம் இரு என்று மிரட்டியிருக்கிறான். இதுபோன்ற FIR-களில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் இடம்பெறாது. ஆனால் காவல்துறை எப்படி பெண்ணின் பெயருடன் வெளியிட்டது என்பது குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது.
அந்த மாணவி அழுதுகொண்டிருப்பதை பார்த்த சிலர் போலீஸ்க்குப் புகார் கொடுத்த காரணத்தாலே இது வழக்காக மாறியிருக்கிறது. 24 மணி நேரத்துக்குள் குற்றவாளி ஞானசேகர் கைது செய்யப்பட்டுள்ளான். அவனுடைய கால், கை உடைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிது செய்துவருகிறார்கள்.
ஒரு சாதாரண பிரியாணி விற்பவரால் எப்படி அண்ணா பல்கலைக்குள் சென்று வர முடியும்? அவனுக்கு அங்கே வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது. கட்சியிலும் தொடர்பு இருக்கிறது. ஆகவே, அவனுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.