குழந்தையை எப்போது பிரிய வேண்டும்?  

பேரன்டிங் டிப்ஸ்

பறவைகள், விலங்குகள் குறுகிய காலத்தில் பிள்ளையை தங்களிடமிருந்து பிரித்துவிடுகின்றன. ஆனால், மனிதர்கள் மட்டும் பிள்ளையை விட்டுவிடாமல் வாழ்நாள் முழுக்க பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கணவன், மனைவி தவிர வேறு எந்த உறவும் 20 வருடங்களுக்கு மேல் நிலைப்பதில்லை என்பதே உண்மை. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மச்சான், அத்தை, சித்தப்பா என்று எந்த உறவு என்றாலும் 20 ஆண்டுகளுக்கு மேல் நெருக்கமாக இருப்பதில்லை. கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு, பணம் போன்ற ஏதேனும் காரணங்களுக்காக இந்த உறவு பிரிந்துவிடும். இது அம்மா, பிள்ளைக்கும் பொருந்தவே செய்யும்.

பிள்ளை தன்னிடம் 20 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்ற உண்மையை ஒவ்வொரு அம்மாவும் மனதில் புரிந்துகொண்டு, பிரிவுக்கு தாயும் தந்தையும் பழக வேண்டும்.

  • ஐந்து வயதில் இருந்து பிள்ளையை தள்ளிப் படுக்க வைத்து பழக்க வேண்டும்.
  • 10 வயதுக்குப் பிறகு தனி அறை கொடுப்பது நல்லது. அதற்கு வசதி இல்லை என்றாலும் தனி இடம் ஒதுக்க வேண்டும்.
  • கல்லூரி காலத்தில் ஹாஸ்டல் வாழ்க்கைக்குப் பழக்க வேண்டும்.
  • திருமணம் முடித்ததும் தனிக்குடித்தனம் அனுப்பிவிட வேண்டும்.

இப்படி, பிள்ளையிடம் இருந்து கொஞ்சம் விலகி நின்று வளர்த்துவந்தால், அந்த பந்தம் நீண்ட காலம் நீடிக்கும். ஆண் குழந்தை மட்டுமின்றி பெண் பிள்ளையையும் இப்படியே வளர்க்க வேண்டும். வலுக்கட்டாயமாக பிள்ளை தன்னுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதே சண்டைக்கும் நீண்ட பிரிவுக்கும் காரணமாகிறது. ஆகவே இந்த உண்மையைப் புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளையிடம் இருந்து பெற்றோர் விலகி நில்லுங்கள். பெற்றோருக்கும் நல்லது, பிள்ளைக்கும் நல்லது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment