• Home
  • உறவுகள்
  • வாழ்வின் இறுதி நிமிடங்கள் எப்படி இருக்கும்..?

வாழ்வின் இறுதி நிமிடங்கள் எப்படி இருக்கும்..?

Image

உறவுக்கு கொஞ்ச நேரம்

பிறந்த நிமிடத்தில் எப்படி இருந்தோம் என்பது யாருக்கும் ஞாபகம் இருப்பதில்லை. ஆனால், மரணம் வரும் தருணத்தை நிறைய பேர் உணர்கிறார்கள். இனி, உயிர் பிழைக்கப்போவதில்லை, சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் இந்த உடலை விட்டு உயிர் பிரியப் போகிறது என்ற உண்மையைப் புரிந்துகொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட இறுதி நேரங்களில் மனிதர்களின் சிந்தனை, பேச்சு, செயல், எண்ணம் எப்படி இருக்கும்..?

இன்று பெரும்பாலான மரணங்கள் மருத்துவமனையில் நிகழ்கின்றன. எனவே, மரண தருணங்களில் உறவினர்கள், நெருங்கியவர்கள் அருகில் இருப்பதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது. அதேநேரம் மருத்துவமனையில் செவிலியர் என்று அழைக்கப்படும் நர்ஸ்கள் நிறைய மரணங்களை நேரில் பார்க்கிறார்கள். கடைசி நொடியில் அவர்கள் விருப்பம், பேச்சு எப்படி இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார்கள்.

செவிலியர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மரணத்தின் கடைசி நிமிடங்களில் மனிதர்கள் இந்த ஐந்து விஷயங்களையே பேசுகிறார்கள்.

  1. என் கையை ஆதரவாகப் பிடித்துக்கொள்ளுங்கள்
  2. என் அருகில் இருங்கள், விலகிப் போகாதீர்கள்.
  3. நான் பாசத்தைக் காட்டுவதற்கு நேரம் ஒதுக்கவே இல்லை.
  4. நான் நேசித்தவர்கள் என்னை விரும்பவில்லை. என்னை விரும்பியவர்களை நான நேசிக்கவில்லை.
  5. தனிமை பயமாக இருக்கிறது.

மிகப்பெரும் தொழிலதிபர், புகழ்பெற்ற கலைஞர், முதுபெரும் அரசியல்வாதி என பிரபலங்கள் யாருமே பணம், புகழ், பதவி, சொத்து பற்றி எதுவுமே பேசவில்லை. ஏனென்றால், இவை எதற்குமே அர்த்தம் இல்லை என்பது அவர்களுக்கு மரணப்படுக்கையில் புரிந்துவிடுகிறது.  

மரணத்தின் தருணத்தில் மனிதருக்குப் புரிவது அன்பு மட்டுமே. பிறரால் நேசிக்கப்படும் மனிதராக மரணிக்க வேண்டும் என்பதே கடைசி விருப்பமாக இருக்கிறது. அதனாலே உறவுகளைத் தேடுகிறார்கள். கடைசி மூச்சு வரையிலும் அன்பு எதிர்பார்க்கிறார்கள்.

அதனாலே, யாரும் இல்லாமல் தனிமையில் மரணம் அடைவதற்கு அஞ்சுகிறார்கள். தன்னை நேசிக்க யாருமே இல்லை என்பது மிகப்பெரும் சோகமாக, வேதனையாக இருக்கிறது. யாராவது அன்புடன் பேசுவார்களா, பாசத்துடன் கையைப் பிடிப்பார்களா என்று வாசலைப் பார்த்தபடி இருக்கிறார்கள்.

வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம். என்பது கடைசி நேரங்களில் அவர்கள் இனிமையான வார்த்தைகளைக் கேட்பதுதான். இறுதி நிமிடங்களில் எப்படிப்பட்ட வார்த்தைகள் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் என்பதை அறிந்துகொள்வோம்.

  • ’உங்களை நினைத்து ரொம்பவும் பெருமைப்படுகிறோம்.
  • உங்கள் அன்பு உயர்வானது, உங்கள் மீது பேரன்பு வைத்திருக்கிறோம்.
  • உங்கள் அன்பை யாராலும் மறக்கவே முடியாது.
  • நீங்கள் சிறந்த வழிகாட்டியாக இருந்தீர்கள்.
  • வாநாள் முழுவதும் எங்கள் மனதில் நீங்கள் இருப்பீர்கள்.

உண்மையோ, பொய்யோ இப்படிப்பட்ட வார்த்தைகளை மரணப்படுக்கையில் இருக்கும் நபர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் நிம்மதியாக மரணம் அடைவார்கள். அது, வாழ்க்கைக்கு ஒரு நல்ல அர்த்தமும் அமைதியும் கொடுக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment