வழிகாட்டும் புத்தகம், உளவியல் ஆலோசனை
வீட்டுக்கு வீடு வாசல்படி என்பார்கள். அதாவது ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் சில பிரச்னைகள், வேதனைகள், சிக்கல்கள் இருக்கும். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, மற்றவர்கள் வாழ்க்கை மட்டும் சீரும் சிறப்புமாக இருப்பதாகத் தோன்றும். திருமண வாழ்க்கையும் அப்படித்தான்.
திருமண காலகட்டம்
எல்லோருக்கும் திருமண வாழ்க்கை ஆரம்பம் இனிப்பாக இருக்கும். சொர்க்கத்தில் மிதப்பார்கள்.
அடுத்து நிஜ உலகிற்குத் திரும்புவார்கள். ஒருவருக்கொருவர் உண்மை முகம் பார்த்து ஏமாற்றம் அடைவார்கள். இதை தாங்கிக்கொள்ள முடியாமல் குறை சொல்லி, சண்டை போடுவார்கள்.
அடுத்த காலகட்டத்தில் குறைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு சிலர் வாழத் தொடங்குகிறார்கள். சிலர் அடுத்தவரை மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். சிலர் அந்த உறவிலிருந்து விலக நினைக்கிறார்கள்.
பொறுமைக்குப் பரிசு
வேறு வழியில்லை, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்துவிடுவோம் என்ற காலகட்டத்திற்கு வருபவர்கள், தங்களை அறியாமல் தோழமை உறவுக்குள் நுழைகிறார்கள். இருவருக்கும் நட்பும் புரிதலும் உருவாகிறது. இந்த உறவு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து காதலாக மாறுகிறது.
ஒரு கட்டத்தில் இந்த காதல் இருவரையும் பிரிக்க முடியாத அளவுக்கு நல்ல தம்பதியராக மாற்றிவிடுகிறது. எனக்கு நீ உனக்கு நான் என்று நல்ல தம்பதியாக வாழத் தொடங்குகிறார்கள்.
தீர்வுகள் உண்டு
தங்கள் திருமண உறவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்பவரே, ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து இனிமையான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். எல்லோரும் இனிய தம்பதியராக மாற முடியும் என்பதே உண்மை.
இதற்கு வழிகாட்டியாக வந்திருக்கிறது, ‘உயிர்த்துணை’ புத்தகம்.
திருமணம் முடித்தவர்கள், திருமணம் முடிக்க இருப்பவர்களுக்கு பரிசளிக்க ஏற்ற புத்தகம்.
ஞானகுரு பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் ‘உயிர்த்துணை’ புத்தகம் விலை 225 ரூபாய். 80725 89355 என்ற செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.
உறவு நிலையைப் புரிந்துகொள்வதற்கு சிலருக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படலாம். இதற்கும் கைகொடுக்கிறது ஞானகுரு கவுன்சிலிங்.
எழுத்தாளர், மனவள ஆலோசகர் எஸ்.கே.முருகன் அவர்களிடம் ஆன்லைன் கவுன்சிலிங் பெறுவதற்கு 80725 89355 என்ற செல்போன் எண்ணில் முன்பதிவு செய்யுங்கள்.
எல்லோரும் இனிப்பான வாழ்க்கை பெறமுடியும் என்று நம்புங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

