வழி காட்டுகிறார் வழக்கறிஞர் நிலா
நீதிமன்றத்தை நாடிவிட்டாலே நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கேஸ் நடக்குமே தவிர, தீர்வு மட்டும் கிடைக்கவே கிடைக்காது என்ற எண்ணம் பலருக்கு உண்டு. அதனாலே விவாகரத்து செய்யாமல் பிரிந்தும், பிரியாமலும் நிறைய தம்பதியர் வாழ்கிறார்கள்.
விவாகரத்து விரைந்து பெறுவதற்கான வழிமுறைகளை சொல்கிறார் வழக்கறிஞர் நிலா.
‘’கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விவாகரத்து பெறுவது எளிதாக இருக்கும். திருமணம் முடிந்த பிறகு ஒரு வருட காலமாவது கணவர், மனைவி பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். அதன் பிறகு விவாகரத்து மனு போட வேண்டும். பொதுவாக இந்த விவாகரத்து மனு கிடைக்கப்பெற்றதும் 6 மாதங்கள் தள்ளியே நீதிமன்றம் விசாரிக்கும்.
இந்த நேரத்தில் ஏதேனும் குறிப்பிட்ட காரணத்தைக் கூறி, விரைந்து மனுவை எடுக்க வேண்டும் என தம்பதியர் இருவரும் கோரும் பட்சத்தில் நீதிமன்றம் மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தும்.
யாரேனும் ஒருவர் விவாகரத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், மணமக்கள் பிளவுக்கான சரியான காரணத்தை நீதிமன்றத்தில் நிரூபித்து விவாகரத்தை கோரலாம். அதாவது கொடுமைப்படுத்துதல், பொய் சொல்லி ஏமாற்றித் திருமணம், தொடர்ந்து வாழ்வது உயிருக்கு ஆபத்து போன்ற காரணங்களில் உடனடி தீர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
விரைந்து விவாகரத்து பெற வேண்டும் என்றால் மிகச்சரியான வழிக்கறிஞரை அணுக வேண்டியது மிகவும் முக்கியம். ஒருசில வழக்கறிஞர்கள் நீண்ட காலம் வழக்கை தள்ளிப்போடுவதன் மூலம் ஆதாயம் பெற முயற்சி செய்யலாம்.
என்ன காரணம் என்றாலும், இரண்டு பேரும் அமர்ந்து பேசி, சம்மதத்துடன் விவாகரத்து பெற்றால், இருவரும் மிக விரைவாக புதிய வாழ்க்கையை வாழ முடியும்’’ என்கிறார்.
இது போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு புதுயுகம் தொலைக்காட்சியில், சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சியில் விடை கிடைக்கிறது.
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு சட்டம் ஒரு வகுப்பறை என்ற நிகழ்ச்சியை பிரபல வழக்கறிஞர் நிலா தொகுத்து வழங்குகிறார். பிரபல வழக்கறிஞர்கள் தினமும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்களின் சந்தேகம் தீர்க்கிறார்கள். போன் செய்தும் சந்தேகம் கேட்கலாம். சட்டத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்.
ஞானகுரு இணையத்திலும் உங்கள் கேள்விகளை அனுப்பிவையுங்கள். உங்கள் சந்தேகங்களை நிலா நிச்சயம் தீர்த்து வைப்பார்.