கிண்டி மருத்துவமனை அதிர்ச்சித் தகவல்கள்
டாக்டரை குத்திய விக்னேஷ் வில்லங்கம் தீர்ந்துபோவதற்குள் விக்னேஷ் என்பவர் போதிய மருத்துவக் கவனிப்பு இல்லாமல் இறந்து போனதாக உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருப்பது கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
உயிரிழந்த விக்னேஷின் தாயார் குமுதா, ‘’எனது மகனுக்கு திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகள்தான் ஆகிறது 2 வயதில் கை குழந்தை இருக்கிறது. பித்தப்பையில் கல் என்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவரை மருத்துவர்கள் கவன்க்கவே இல்லை. ஒரு மருத்துவருக்கு பிரச்சனை என்றால் அவர் படித்தவர் என எல்லோரும் அவருக்காக போராட்டம் செய்கிறீர்கள். ஆனால் நாங்கள் மட்டும் சும்மாவா? எங்களுக்கு நீதி இல்லையா?’’ என்று கேட்கிறார்.
அதேநேரம் மருத்துவமனை சார்பில், ‘’விக்னேஷ்க்கு முறையான சிகிச்சைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டது” தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடர முடியாத நிலையில், நோய் தீவிரத்துடன் விக்னேஷ் அரசு மருத்துவமனை கொண்டுவரப்பட்டார்’’ என்று நடந்ததை விவரிக்கிறார்கள். அதாவது, 14 ம் தேதி இரவு 11.25 க்கு பேஷன்ட் ஃபுல் போதையில மூச்சு பேச்சில்லாம ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணிருக்காங்க இரவு 12.50 க்கு குடல்நோய் வார்டுல அவர மாத்தி மூச்சு விட சிரமப்படுறத பாத்து பிரஷர் செக்கப் உள்ளிட்ட சோதனைகளை செஞ்சு இரவு 1.10 ஆக்சிஜின் டியூப் வெச்சி பாத்துருக்காங்க
அதுக்கப்புறம் அவர இயல்பு நிலைக்கு கொண்டுவந்து 1 மணி நேரத்துக்கு ஒரு தடவைனு இன்ஜெக்சன் போட்ருக்காங்க அதிகாலை 4 மணிக்கு BP குறைஞ்சு 80/50ன்னு போயிருக்கு அதனால noradrenaline இஞ்ஜெக்சன் 1 மணி நேரத்துக்கு ஒரு தடவைனு போட்ருக்காங்க காலை 8.50க்கு திடீர்னு மாரடைப்பு ஏற்பட்டிருக்கு, adrenaline iv கொடுத்து உடனே CPR பண்ணிருக்காங்க.
இவ்வளவு சிகிச்கையும் பலனிக்காம காலை 9.18க்கு இறந்துட்டாரு இதுக்குப்பிறகு மருத்துவமனை சார்புல அவங்க குடும்பத்துல இருக்க அப்பா, அவரோட மனைவி, சகோதரினு எல்லார்கிட்டையும் கையெழுத்து வாங்கிட்டு பிரேதத கொடுத்துட்டாங்க டாக்டர் இல்லை சிகிச்சை செய்யலன்னு சொன்னது எல்லாம் பொய்’’ என்று விள்க்கம் கொடுக்கிறார்கள்.
தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது என்று சொல்லப்படுவதை உடைக்கு வகையில் இப்படி வேண்டுமென்றே தூண்டி விட்டிருப்பதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகிறார்கள்.