செக் செய்து பாருங்கள்
ஆண்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி காட்டும் பெண்கள் இருக்கிறார்கள், படுக்கையில் இடம் கொடுக்கும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், இதனால் மட்டும் ஆண்களின் மதிப்பை பெற்றுவிட முடியாது.
ஏனென்றால் பணம் கொடுத்தால் கவர்ச்சியான பெண்களை விலை கொடுத்து வாங்கிவிடமுடியும். பெண்களின் கவர்ச்சியை ஆண்கள் ரசிப்பார்களே தவிர மதிப்பதில்லை. அதேநேரம், பெண்களின் ஐந்து குணங்களை ஆண்கள் மிகவும் மதிக்கிறார்கள்.
- புத்திசாலித்தனமாகவும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும் பெண்களைக் கண்டு ஆண்கள் பிரமிக்கிறார்கள்.
- பணத்தை வெட்டியாகச் செலவழிக்காமல் மிச்சப்படுத்தவும் முதலீடு செய்யவும் திட்டமிடும் பெண்களை மதிக்கிறார்கள்.
- உடல் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தரும் பெண்களை மதிக்கிறார்கள்.
- சமையலறை, கழிவறையை சுத்தமாக வைத்திருக்கும் பெண்களை ஆண்கள் மதிக்கிறார்கள்.
- கணவன், குழந்தைக்காக தங்கள் லட்சியத்தை விட்டுக்கொடுக்காமல் போராடும் பெண்களை மதிக்கிறார்கள்.
எனவே, அழகுக்கும் கவர்ச்சிக்கும் பெண்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம், ஆண்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட குணங்களை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியதில்லை, இதுவே பெண்களின் சுயமரியாதை என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
